சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டவ்-தெ புயல்.. 23 வருடத்திற்கு பின் 150 கிமீ+ வேகத்தில் காற்று.. குஜராத்திற்கு வெதர்மேன் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத்தில் இதுவரை 2 புயல்கள் மட்டுமே 150 கிமீ வேகத்திற்கும் அதிகமான காற்றுடன் கரையை கடந்துள்ளது, டவ்-தெ புயல் கரையை கடக்கும் போது அதன் காற்றின் வேகம் 190 -200 கிமீ ஆக இருக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தெ புயல் எதிர்பார்த்ததை விட அதிகமாக தீவிரம் அடைந்து கொண்டு இருக்கிறது. அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள டவ்-தெ புயல், நிமிடத்திற்கு நிமிடம் வேகம் கூடிக்கொண்டே கொண்டே இருக்கிறது.

பெங்களூரில் கொரோனா கேஸ் சரிவு.. சந்தோஷப்படத்தான் முடியாது.. டெஸ்ட் எண்ணிக்கையை குறைத்ததுதான் காரணம்பெங்களூரில் கொரோனா கேஸ் சரிவு.. சந்தோஷப்படத்தான் முடியாது.. டெஸ்ட் எண்ணிக்கையை குறைத்ததுதான் காரணம்

தற்போது குஜராத் நோக்கி டவ்-தே புயல் 20 - 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் காற்றின் வேகம் 210 கிமீ ஆக உள்ளது.

காற்று

காற்று

இந்த டவ்-தெ புயல் காரணமாக வீசும் காற்றின் வேகம் வானிலை மையம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டவ்-தே அதி தீவிர புயலானது குஜராத் டையூ குஜராத் -மஹூவா இடையே இன்று இரவே கரையை கடக்கக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

மழை

மழை

இதன் வேகம் காரணமாகவே தற்போது கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, தமிழகத்தில் குமரி மற்றும் கேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலால் காற்றின் வேகம் 210 கிமீ ஆக இருந்தாலும் கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கிமீ ஆக குறையும் வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்

இந்த நிலையில் டவ்-தே புயலால் ஏற்படும் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் செய்துள்ள டிவிட்டில், இதற்கு முன் குஜராத்தை இரண்டு புயல்கள் மட்டுமே இவ்வளவு வேகமான காற்றுடன் தாக்கி உள்ளது. குஜராத்தில் இரண்டு புயல் மட்டுமே 150 கிமீக்கும் அதிகமான காற்றின் வேகத்துடன் கரையை கடந்துள்ளது.

இரண்டு புயல்கள்

1998 ஏற்பட்ட புயல் - குஜராத்தின் போர்பந்தரில் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 195 கிமீ ஆக இருந்தது. 1982ல் ஏற்பட்ட புயல் குஜராத்தின் வீர்வல் பகுதியில் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 150 கிமீ ஆக இருந்தது. 2001ல் புயலில் காற்றின் வேகம் 210 கிமீ ஆக இருந்த போதும் அது கரையை கடக்கும் போது 60 கிமீ ஆக காற்றின் வேகம் குறைந்தது.

வேகம்

வேகம்

தற்போது டவ்-தெ புயல் கரையை கடக்கும் போது அதன் காற்றின் வேகம் 190 -200 கிமீ ஆக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன் இரண்டு புயல்கள் மட்டுமே குஜராத்தில் 150 கிமீ வேகமான காற்றுடன் கரையை கடந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். 1998க்கு பின் 23 வருடங்கள் கழித்து குஜராத்தில் மீண்டும் வலுவான புயல் தாக்க உள்ளது. இதனால் இந்த புயல் அதிக சேதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

English summary
Gujarat has seen only 2 storms with 150+ KM wind speed so far in the history, 2021 Cyclone Tayktae may be third says, Tamilnadu Weatherman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X