சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத் திருமணம் நிகழ்ச்சி.. மெகந்தி, குதிரை சவாரி, விருந்து எல்லாம் உண்டு.. முக்கியமானதை தவிர்த்து

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. ஆனால் மணப்பெண்தான் இல்லை.

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். இவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. 27 வயதான இவர், தனது சகோதரனுக்கு நடத்தப்பட்ட திருமணத்தை கண்டார். இதையடுத்து தனக்கும் அது போல் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோரிடம் கேட்டார்.

அவரது ஆசையை நிறைவேற்ற அஜய்க்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருமணத்தில் வழக்கம் போல் மெகந்தி நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நடைபெற்றது.

சர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்! சர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

உறவினர்கள்

உறவினர்கள்

குஜராத்தி முறைப்படி மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

மறுக்க முடியவில்லை

மறுக்க முடியவில்லை

ஆனால் இந்த திருமணத்தில் மணமகள் மட்டும் இல்லை. இதுகுறித்து அஜய்யின் தந்தை விஷ்ணு பரோட் கூறுகையில் மற்றவர்களின் திருமணத்தை பார்த்த அஜய் தனக்கும் திருமணம் செய்ய வேண்டும் என கேட்டான். என்னால் மறுக்க முடியவில்லை.

மகனின் கனவு

மகனின் கனவு

அவனுக்கு ஏற்ற ஜோடியை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் மகனின் கனவை நிறைவேற்றியிருக்கிறேன்.

குஜராத் இசை

திருமண நாளன்று அஜய் தங்க நிறத்தினாலான ஷர்வாணியை அணிந்திருந்தார். பிங்க் நிறத்தில் தொப்பியும் வெள்ளை மற்றும் ரோஸ் நிறத்தில் ரோஜா பூ மாலையும் அணிந்திருந்தார். 200 பேர் கலந்து கொண்ட திருமண ஊர்வலத்தில் குதிரை மீது அமர்ந்து கொண்டு அங்கு வாசிக்கப்பட்ட குஜராத் இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார்.

அஜய்க்கு மகிழ்ச்சி

அஜய்க்கு மகிழ்ச்சி

800 பேருக்கு திருமண விருந்து பரிமாறப்பட்டது. வழக்கம்போல் இந்த திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் அடித்து விநியோகம் செய்யப்பட்டன. அஜய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திருமணத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.

English summary
Gujarati youth had a lavish wedding without bride. His father wants to fulfil his wishes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X