சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடநாடு கொலை வழக்கில் சயான் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: கொடநாடு கொலை வழக்கில் சயான் மீது போடப்பட்ட குண்டாசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொடநாடு காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான சயான் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கோவை மத்திய சிறையில் சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க கோவை மாவட்ட ஆட்சியர், மார்ச் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

Gundas cancellation over Sayan in Kodanad murder case: high court order

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சயான் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், விபத்தில் மனைவியையும், பிள்ளையையும் பறிகொடுத்த சம்பவத்தை தன் மீதான குற்ற வழக்குகளுடன் தொடர்புபடுத்தியிருப்பதாகவும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!மதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மேலும் 409 பக்கங்களில் தமிழில் ஆவணங்கள் கொண்ட குண்டர் சட்ட கைது உத்தரவை தமிழ் தெரியாத தனக்கு படித்துகாட்டினர்.

மலையாளத்தில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனவும் சயான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு, சயான் மீதான குண்டாஸை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

English summary
madras high court order Gundas cancellation over Sayan in Kodanad murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X