சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் என்ன ஆச்சு இந்த குருமூர்த்திக்கு? ரஜினி பொய் பிரச்சாரம் செய்றாருனு டுவீட் போட்றாரே!

Google Oneindia Tamil News

Recommended Video

    S.Gurumurthy: 'இது வெற்றியான தோல்வி'- புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை என பொறுப்புள்ளவர்கள் சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக ரஜினிகாந்த்தை ஆடிட்டர் குருமூர்த்தி மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி எடுபடவில்லை.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் பாஜக பெற்றுள்ள வெற்றியானது தனிமனிதனான மோடியையே சாரும். நேரு, இந்திராவுக்கு பிறகு மோடிதான் செல்வாக்கு மிக்க தலைவர் என்றார்.

    கொம்பன் ராஜ்கிரண்....கண்மணி சின்னவரு.... நல்லாத்தாய்யா சாமியாடறாங்க....! கொம்பன் ராஜ்கிரண்....கண்மணி சின்னவரு.... நல்லாத்தாய்யா சாமியாடறாங்க....!

    எதிரான அலை

    எதிரான அலை

    அப்போது அவரிடம் தமிழகத்தில் பாஜக தோற்றதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையால் பாஜக தோல்வி அடைந்துள்ளது என ரஜினி கூறியிருந்தார்.

    தோல்வி

    தோல்வி

    இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி தமிழகத்தில் பாஜக தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் 5 தொகுதிகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் 5 தொகுதிகளில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றுள்ளது.

    3 லட்சம் வித்தியாசம்

    3 லட்சம் வித்தியாசம்

    பாஜகவை எடுத்துக் கொண்டோமேயானால் 2 தொகுதிகளில் 2 லட்சத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரே ஒரு தொகுதியில் 3 லட்சத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் இன்னொரு தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றுள்ளது.

    யாருக்கு எதிர்ப்பு

    யாருக்கு எதிர்ப்பு

    ஒரு வேளை மோடி எதிர்ப்பு அலை வீசியிருந்தால் எல்லா தொகுதிகளிலும் பாஜக 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியெனில் இது யாருக்கு எதிரான எதிர்ப்பு அலை? என கேட்டுள்ளார்.

    டுவீட்

    இந்த நிலையில் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை என ரஜினி கூறியதை அவரது பெயரை குறிப்பிடாமல் மற்றொரு டுவீட்டில் குருமூர்த்தி விமர்சனம் செய்துள்ளார்.

    மறைமுக விமர்சனம்

    மறைமுக விமர்சனம்

    அவர் கூறுகையில் எதிர்ப்பு அலை யாருக்கு என்ற டுவீட்டை நான் பதிவு செய்ததற்கு காரணமே மிகவும் பொறுப்பான இடத்தில் உள்ளவர்கள் மோடிக்கு எதிரான அலை வீசியதால்தான் தமிழகத்தில் பாஜக தோல்வி என பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையில்லை என ரஜினியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் குருமூர்த்தி. ரஜினிக்கும் குருமூர்த்திக்கும் சுமூகமான நட்பு நீடித்து வரும் நிலையில் ரஜினியை ஸ்டிராங்காக எதிர்க்க மனமில்லாமல் நாசுக்காக விமர்சித்துள்ளார் குருமூர்த்தி.

    English summary
    Gurumurthy indirectly criticises Rajinikanth while he explainst why BJP in Tamilnadu lose in election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X