சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகளும் ‘ஆடிட்டர்’ குருமூர்த்தியின் ‘குமாரசாமி’ கணக்கும்... உண்மை இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    S.Gurumurthy: 'இது வெற்றியான தோல்வி'- புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளை முன்வைத்து தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை வீசவே இல்லை என துக்ளக் ஆசிரியரான 'ஆடிட்டர்' குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தேர்தல் ஆணைய விவரங்களை மறைத்து குருமூர்த்தி பொய் புள்ளி விவரங்களை பதிவிட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    குருமூர்த்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது:

    2 இடங்களில் அதிமுக 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது; 5 இடங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் தோல்வியைத் தழுவியது. 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் 5 இடங்களிலும் தோற்றது.

    பாஜகவோ 2 இடங்களில் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளில்தான் தோற்றது; ஒரு இடத்தில் 3 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் ஒரு இடத்திலும் பாஜக தோற்றுள்ளது. இங்கே மோடி எதிர்ப்பு அலை வீசி இருந்தால் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் 4 முதல் 5 லட்சம் வாக்குகள் வித்திசாயத்தில் தோல்வியைத் தழுவி இருக்க வேண்டுமே?

    இதுதான் குருமூர்த்தியின் பதிவு. இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மையா? தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

    தோற்றது பாமக

    தோற்றது பாமக

    அதிமுக 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எந்த தொகுதியிலும் தோல்வி அடையவில்லை. திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் பாமகதான் போட்டியிட்டது. அந்த கட்சியின் வேட்பாளர்கள்தான் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

    4 லட்சம் வாக்குகளில் தோற்ற தேமுதிக

    4 லட்சம் வாக்குகளில் தோற்ற தேமுதிக

    வடசென்னையிலும் தேமுதிகதான் போட்டியிட்டது. அந்த கட்சியின் வேட்பாளர்தான் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அதிமுக குறித்த குருமூர்த்தியின் பொய்யான புள்ளி விவரம்.

    பொன்னார் தோல்வி

    பொன்னார் தோல்வி

    தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலையே வீசவில்லை என்கிறாரே குருமூர்த்தி... முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலில் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இத்தேர்தலில் அவர், 2.59 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியிருக்கிறார்.

    எச். ராஜா பரிதாப தோல்வி

    எச். ராஜா பரிதாப தோல்வி

    சிவகங்கை கடந்த தேர்தலில் அதிமுக வென்ற தொகுதி. அதுவும் 2.29 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கைப்பற்றிய தொகுதி இம்முறை பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு தாரை வார்க்கப்பட்டது. அத்தொகுதியில் எச். ராஜா 3.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வினார்.

    ராமநாதபுரம் களநிலவரம்

    இதே நிலைமைதான் ராமநாதபுரம் தொகுதியில்... இங்கு அதிமுக கடந்த முறை 1.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இம்முறை பாஜக 1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஒரே காரணத்துக்காக அதிமுக வாக்கு வங்கியில் கணிசமாக திமுகவுக்குப் போயிருக்கிறது என்பதையும் புள்ளி விவரங்கள் எடுத்து காட்டியிருக்கின்றன.

    உண்மையை ஒப்புக் கொள்ளாமல் ‘ஆடிட்டர்' குருமூர்த்தி ‘குமாரசாமி' கணக்காக விளையாடுகிறார்.!

    English summary
    Senior Journalists has exposed the Auditor Gurumurthy's incorrect data on Loksabha Election Results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X