சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Targets : அடுத்தடுத்து வேட்டையாடப்படும் காங்கிரஸ் தலைவர்கள்- வீடியோ

    சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகங்களால் விமர்சித்துள்ளார்.

    ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேடப்படும் நபர் என சிபிஐ, அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் வெளியிட்டது. இவ்வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றத்தை சிதம்பரம் அணுகியுள்ளார்.

    Gurumurthy slams P Chidambaram

    முன்னதாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர், ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தார். இந்நிலையில் ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

    அதேபோல் துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ். குருமூர்த்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரத்தை மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ப.சிதம்பரம் ஒரு குற்றவாளி மட்டும் அல்ல; கோழையும் கூட என காட்டமாக தாக்கியுள்ளார் குருமூர்த்தி.

    மேலும் போலி ஆவணங்கள் அடிப்படையில் நாங்கள் கைது செய்யப்பட்ட போது துணிச்சலுடன் அதை எதிர்கொண்டவர்கள் நாங்கள். அதனால்தான் ப.சிதம்பரத்தை கோழை என்கிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் குருமூர்த்தி.

    1987-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இது தொடர்பான கட்டுரைகளை குருமூர்த்தி எழுதி வந்தார். இந்த நிலையில் 1987-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி நள்ளிரவில் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதை குறிப்பிட்டுத்தான் குருமூர்த்தி இன்று ட்விட்டரில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

    English summary
    Thuglak Editor S Gurumurthy tweets, "Chidambaram absconding is worse them Chidambaram getting arrested..it shows he is not only an accused. He is also a coward. We who faced wrongful arrest based on forged docs and humiliated the govt by our courageous resistance have a right to call PC a coward besides a fraud"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X