சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட்கா பதுக்கலுக்கு நூதன அபராதம் - புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ5 லட்சம் செலுத்த ஹைகோர்ட் ஆர்டர்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: குட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்ட நபர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நூதன தண்டனையை வழங்கியிருக்கிறது. அடையார் கேன்சர் நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற

நிபந்தனையின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனியார் குடோனில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 8 லட்சத்து 40 ஆயிரம் பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து அதன் உரிமையாளரும், உதவியாளரும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Gutka case: Madras HC fined Rs 5 lakhs to anticipatory bail person

இந்த வழக்கில் மாதவன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட மத்தகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் மாதவன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளனர்.

அதனால் தவறுதலாக வழக்கில சேர்க்கப்பட்டதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி வாதிட்டார்

"எல்லாருமே ஏமாத்தறாங்க.. என்ன பண்றதுன்னே தெரியல".. எலிபேஸ்டை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை, வீடியோ!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுதாரர் சென்னை அடையாரில் உள்ள கேன்சர் நிறுவனத்துக்கு 5 லட்சம்
ரூபாயை 4 வாரத்தில் வழங்க வேண்டும் எனவும், வேலூர் மேஜிஸ்திரேட்டிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கான தனிநபர் உத்திரவாதமும், அதே
தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு 4 வாரத்திற்கு நேரில் ஆஜராகி கையெப்பம் இட வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது என்ற நிபந்தனையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

English summary
Madras High Court grants anticipatory bail to guthka case imposes fine to Rs.5 lakh give to Adayar cancer institue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X