சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்குள் குட்கா எடுத்து சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது ஒத்தி வைத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட களஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக அதை சட்டசபையில் ஆதாரத்துடன் இருப்பதாக குட்கா பொருட்களை காட்டி அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்தார்.

Gutka in Tamil Nadu assembly: Madras HC adjourned judgment on notices to DMK MLAs

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர். அதில் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சட்டசபை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கானது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வாதங்கள் நடைபெற்றது இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் என்ஆர் இளங்கோ ஆஜராகி வாதிடுகையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ'க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் திமுக மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமித் ஷா.. வீட்டு தனிமையில் இருக்கப்போவதாக தகவல்கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமித் ஷா.. வீட்டு தனிமையில் இருக்கப்போவதாக தகவல்

பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை 2017 பிப்ரவரி 18ம் தேதியே 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முடிவெடுக்காத நிலையில் தற்போதும் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு சபாநாயகரின் அனுமதி பெற்றே ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பியதாகவும், மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை எனவும் வாதிடப்பட்டது.

2017 மார்ச் முதல் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும், 2017 பிப்ரவரி 18ஆம் தேதியே 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் தற்போதும் பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

English summary
The DMK, including Stalin, who took Gutka into the Tamil Nadu assembly. The Chennai High Court has adjourned judgment in the case against the notice sent to 21 MLAs by the infringement panel. The case has been pending for the last three days and has been adjourned without mentioning the date of judgment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X