சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக கூட்டணிக்கு வைத்த புதுப் பெயரில் குறை... எச்.ராஜா கண்ணில் எது படுகிறது பாருங்க..!

திமுக கூட்டணி பெயர் குறித்து எச் ராஜா ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணிக்கு புதுசா ஒரு பெயர் வெச்சாலும் வெச்சாங்க.. பாஜக புலம்பலையும் விமர்சனத்தையும் ஆரம்பித்துவிட்டது. அதிலும் எச்.ராஜா கண்ணில் எது தெரியுது பாருங்க!

நேற்று திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு கூட்டணிக்கு "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறோம்" என்று ஸ்டாலின் சொன்னார்.

இதைதான் பாஜக பிடித்து கொண்டது. முதல் ஆளாக கண்டனம் சொன்னது தமிழிசை சவுந்தராஜன்தான்! "மதச்சார்பின்மை கட்சியை ஆதரிப்போம் என்று கூறும் ஸ்டாலின், கட்சி பெயரே மதம் சார்ந்த பெயர் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் உங்கள் மதச்சார்பின்மையா?, திமுக-காங்கிரஸ் கூட்டணி அடிக்கடி நிறமாறும் பச்சோந்தி கூட்டணி" என்று விமர்சித்திருந்தார்.

நெய் வடியுது

இன்றைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இந்த கூட்டணி பெயர் பற்றி கருத்து சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ட்விட்டரில்,"கூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கும். ஆனால் கூட்டணிக்கு பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாம். கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மநி எங்கே போயிற்று என்பது போல் உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

பாடம் நடத்துகிறார்

பாடம் நடத்துகிறார்

இருக்கிற கட்சியை எல்லாம் விட்டுவிட்டு எச்.ராஜா கண்ணில் முஸ்லீம் லீக்தான் முதலில் தென்பட்டுள்ளது. ஆனால் எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்கள் ஏகப்பட்டவை குவிந்து வருகிறது. "மதசார்பற்ற என்றால் எல்லா மதத்தினரும் ஒற்றுமையானது என்று அர்த்தம்" என்று ஒருவர் பாடம் நடத்துகிறார். மற்றொருவரோ, "இந்துக்களுக்கு உதவ நன்மை செய்ய கட்சி கூடாதா? அப்படி ஒரு கட்சி இருந்தால் அது மத வாத கட்சியா?" என கேள்வி எழுப்புகிறார்.

நம் கேள்வி

நம் கேள்வி

"நீங்களும் தான் முதலில் அதிமுகவோடு , பிறகு திமுகவோடு, இப்போது மறுபடியும் அதிமுவோடு கூட்டணி. இதற்கு பெயர் பச்சோந்தியா, கூட்டணி மாற்றமா? இல்லை தடுமாற்றமா?" என்று நமக்கும் ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது.

மதி

மதி

நமக்கு இன்னொரு கேள்வியும் எழுப்ப தோன்றுகிறது.. அதென்ன ட்வீட்டில் "மநி" என்று உள்ளது? ஓ... "மதி" என்பதுதான் இப்படி வழக்கம்போல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டதா?! அப்ப ஓகே...!

English summary
H Raja has criticized DMK Alliances New Name and Muslim League
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X