சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்கியர் படுகொலை விவகார சர்ச்சை.. கோதாவில் குதித்த எச். ராஜா!

Google Oneindia Tamil News

டெல்லி: 1984 சீக்கியர் படுகொலை விவகாரம் குறித்த சர்ச்சையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் களமிறங்கியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் தற்போதைய பிரச்சனைகள் அப்படியே ஓரம்கட்டப்பட்டுவிட்டன. 1980களின் சர்ச்சைகள், ஊழல் விவகாரங்கள்தான் இப்போது ரைக்கை கட்டி பறக்கின்றன.

H Raja also joins Anti-Sikh riots row

குறிப்பாக 1984ம்-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று தொடர்ந்து பாஜக முன்வைத்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம்பிட்ரோடா, சீக்கியர் படுகொலை என்பது முடிந்து போன விஷயம்.. என்ன செய்ய முடியும்? என அலட்சியமாக பதில் அளித்தது பெரும் சர்ச்சையானது. சாம் பிட்ரோடாவை மன்னிப்பு கேட்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ராகுல்காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாது.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து ராகுல்காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாது.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, என்னால் இன்றும் மறக்க முடியாத நாள்.. இளைஞர் காங்கிரசார் டெல்லி வீதிகளில் பெட்ரோல் குண்டுகளுடன் வன்முறைகளில் ஈடுபட்டனர். அப்போது உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு வாஜ்பாய் பேசினார். ஆனால் இளைஞர் காங்கிரசாரை யாரும் தடுக்கவில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
BJP National Secreatry H Raja also joined 1984 Anti-Sikh Riots row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X