சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியைப் போலவே.. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும்.. எச். ராஜா எச்சரிக்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் நடப்பது போலவே நாளை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எச்சரித்து டிவீட் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    டெல்லியைப் போலவே இங்கும் கலவரம் வரும் என்று அவர் பகிரங்கமாகவே எச்சரித்துள்ளார். மேலும் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    h raja asks to remove protesters from vannarapettai

    டெல்லியில் அமைதியான முறையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது சிஏஏ ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலால் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் எரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஒரு காவலரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்த நிலையில் வன்ணாரப்பேட்டையிலும் இதுபோல கலவரம் வரும் என்று எச். ராஜா எச்சரித்திருப்பது பதட்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுதொடர்பாக எச். ராஜா நேற்று போட்ட டிவீட்டில் கூறியுள்ளதாவது:

    "கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்"

    எச். ராஜாவின் இந்த எச்சரிக்கைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்கள் வரும் என்று எச். ராஜா கூறியுள்ளார். யாருக்கு ஆயுதங்கள் வரும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லவில்லை. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும் என்றால் யாரேனும் ஏதேனும் திட்டம் தீட்டியுள்ளனரா, அது எச். ராஜாவுக்கு ரகசியத் தகவலாக தெரிய வந்துள்ளதா என்றும் புரியவில்லை.

    English summary
    BJP National secretary H Raja has warned that Chennai Vannarapettai also see a riot like Delhi and asked the Govt to evacuate the Anti CAA protesters from the spot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X