சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்ன கேப் கிடைத்தால் போதும்.. மறுபடியும் பெரியாரை வம்புக்கிழுத்த எச். ராஜா!

வைரமுத்துவின் பேச்சுக்கு எச்.ராஜா கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மறுபடியும் பெரியாரை வம்புக்கிழுத்த எச். ராஜா- வீடியோ

    சென்னை: ஒரு சின்ன கேப் கிடைச்சாகூட போதும், அங்கெல்லாம் உள்ளே நுழைந்து பெரியாரை இடித்துரைத்து ஒரு கருத்தை போடுகிறார் எச்.ராஜா!

    சென்னையில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது, "திருமணம் என்பது ஒரு சமீபகாலத்து நாகரிகம்.

    ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த உறவு என்பது பந்தப்படுத்தப்பட்டு சட்டபூர்வமாக வந்ததும் ஒரு அரசமைப்பு சட்டத்துக்குள் அகப்பட்டு கொண்டதும் கொஞ்சம்தான். 3000 வருடமாகத்தான் தாலி, திருமணம் எல்லாம் இருக்கிறது. இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது.

    முற்றுகை கோட்டை

    முற்றுகை கோட்டை

    இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம். காலப்போக்கில் மறைந்தே போகலாம். திருமணம் தனது கடைசி சுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனித குலம் வேறு ஒரு நாகரிகத்தை நோக்கி எட்டுவைக்கும். திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்" என்றார்.

    பண்பாடு

    பண்பாடு

    வைரமுத்துவின் இந்த பேச்சுதான் இப்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்துமதத்துக்கு எதிரான ஒரு பேச்சாகவும், பண்பாட்டை சீர்குலைக்கும் விதமாக வைரமுத்து பேசியதாகவும் ஒரு சாரார் இதனை விமர்சிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் வைரமுத்து இன்றைய யதார்த்தத்தைதான் பேசுகிறார் என்று பலர் பாராட்டியும் வருகிறார்கள்.

    கவிதை திருட்டு

    கவிதை திருட்டு

    இதில் எதிர்ப்பை காட்டி இருப்பவர்களில் முக்கியமானவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாதான். ஆண்டாள் விஷயத்திலிருந்து வைரமுத்து என்றாலே முதல் ஆளாக கருத்தை சொல்லும் எச்.ராஜாதான் இப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் "திருமணம் என்பது சமீபகாலத்து நாகரீகமாம் ஆனால் கவிதை திருட்டு தொன்மையானது போலும். திருமணமின்றி பெற்றுப் போடப்படும் குழந்தைகளை எங்கு கொண்டு விடுவார்கள். ஆண்டவனே தமிழர்களை இவர்களிடமிருந்து காப்பாற்று.

    ஈ.வெ.ரா effect ஓ!

    ஈ.வெ.ரா effect ஓ!

    ஆமாம் அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உடை அணியாமல் காடுகளில் திரிந்தான். எதிர்காலத்தில் அப்படித்தான் திரிவானா மனிதன்? இதற்கு பெயர்தான் ஈ.வெ.ரா effect ஓ!" என்று பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் பேச்சுக்கு எச்.ராஜா பதில் சொன்னாலும், எதற்காக பெரியாரை உள்ளே இழுத்துகொண்டு வந்து கிண்டல் செய்து விட்டு போகிறார் என்றுதான் புரியவில்லை.

    English summary
    H.Raja slams Vairamuthu's Marriage Speech and Controversy tweet about EVR Periyar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X