• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்

|

சென்னை: "சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என்.யூ வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்" என்று விசிக தலைவர் திருமாவளவனை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த நபர்கள் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் சரமாரியாக தாக்குதலை நடத்தினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.

கூட்டணியால் பாஜக குறைவான இடங்களில் வெற்றி.. பொன்.ராதா கொடுத்த பேட்டி.. ராஜேந்திர பாலாஜி சொன்ன பதில்

ஏபிவிபி மாணவர்கள்

ஏபிவிபி மாணவர்கள்

மேலும் இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்று நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நாட்டின் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பயங்கரவாத செயல்

பயங்கரவாத செயல்

அதில், "ஏபிவிபியின் திட்டமிட்ட இந்த வன்முறை அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை மெய்ப்பிக்கிறது... பயங்கரவாதச் செயலுக்கு காரணமான ஏ.பி.வி.பி. குண்டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்... வளாகத்துக்குள் இதை அனுமதித்து ஊக்குவித்த துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்... அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறைக்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

அமித்ஷா

ஏவிபிவி மாணவர்கள் அமைப்பு மட்டுமல்லாமல், திருமாவளவன் அமித்ஷாவையே நேரடியாகவே இதில் சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டி இருந்தார். திருமாவளவனின் இந்த அறிக்கைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மறைமுகமாக பதிலடி தந்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர், டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என்.யூ வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்" என்று தாக்கியுள்ளார்.

முகமூடி நாடகம்

அதேபோல, தமிழக மாணவர்கள் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "இடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 1964-67 காலகட்டத்தில் திக& திமுக இந்தி எதிர்ப்பு நாடகத்தை மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சி.பி.எஸ்.இ.பள்ளி முதலாளிகள்" என்றும் பதிவிட்டுள்ளார். எச்.ராஜாவின் இந்த ட்வீட்களுக்கு வழக்கம்போல ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

 
 
 
English summary
bjp senior leader h raja attacks vck thirumavalavans reaction on jnu and tweet about it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X