சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா

எடப்பாடி பழனிசாமி ஆடை குறித்து எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "முதல்வர் அணியும் ஆடையை பத்தி ஏன் பேசறீங்க.. அப்படின்னா கருணாநிதி அன்னைக்கு போட்ட டிரஸ் பத்தியும் பேச ஆரம்பிச்சிடுவாங்க" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு போனதில் இருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அவரது கெட்-அப் தான்.

H Raja comment on CM Edapadi Palanisamys new get up

எடப்பாடியாரின் இந்த கோட்-சூட் ஆடை சோஷியல் மீடியாமல் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஒருசிலர் இது சம்பந்தமான மீம்களையும் போட்டு வருகின்றனர். ஆனால் ஆடை அணிவது தனிநபர் உரிமை என்றும், அதை விமர்சிக்க கூடாது என்றும் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. மாற்று கட்சியில் இருந்தாலும் சீமானும் இதைதான் சொல்லி இருந்தார்.

அந்த வகையில், கூட்டணியில் உள்ள பாஜகவின் எச்.ராஜாவும் கருத்து சொல்லி உள்ளார். காரைக்குடியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்லி உள்ளதாவது:

"முதல்வர் அணியும் உடையை பெரிதுபடுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. குளிருக்கு ஏத்தமாதிரி போட்டிருக்கிறது என்ன தப்பு? இப்படி முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள். ஆயிரம்தான் இருந்தாலும் அவர் நம்முடைய மண்ணின் முதல்வர்.

சாமானிய மக்களுக்கு சாட்டையடி.. தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்புசாமானிய மக்களுக்கு சாட்டையடி.. தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு

அதையும் மீறி முதல்வர் அணியும் ஆடையை விமர்சித்தால், அன்று ஆபிரகாம் லிங்கன் சிலையை கொண்டு வரும்போது கருணாநிதி அமெரிக்காவில் என்ன டிரஸ் போட்டுட்டு இருந்தாருன்னு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க" என்றார்.

இப்போது உள்ள தலைமுறைக்கு, அன்றைய கருணாநிதியின் டிரஸ் பத்தின சமாச்சாரம் தெரியவில்லை என்றாலும், பாயின்ட் எடுத்து கொடுத்து எச். ராஜா கேட்க வைத்துவிடுவார் போல இருக்கிறதே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

English summary
BJP National Secretary H Raja says about CM Edapaid Palnisamys coat suit and criticized Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X