எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை உங்க குடும்பம் முடிவு செய்யக் கூடாது: கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி
சென்னை: ஒருவர் எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்பதை உங்கள் குடும்பம் முடிவு செய்யக் கூடாது என திமுக எம்.பி. கனிமொழிக்கு பதில் கொடுத்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
நாகை அருகே மாட்டுக் கறி விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை இந்து மக்கள் கட்சி நிர்வாகி கத்தியால் குத்தினார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
வடஇந்தியாவைப் போல தமிழகத்திலும் கும்பல் வன்முறை கோஷ்டிகள் களமிறங்கிவிட்டதாக ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டது. இது தொடர்பாக ட்விட்டரில் திமுக எம்.பி. கனிமொழி, எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல என பதிவிட்டிருந்தார்.
உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr82Je
— H Raja (@HRajaBJP) July 14, 2019
இதற்கு இன்று பதிலளித்து பாஜக தேசிய செயலாளர் எச்.. ராஜா தமது ட்விட்டர் பதிவில், உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல என பதில் தந்துள்ளார்.
வழக்கம் போல எச்.ராஜாவின் இந்த பதிவிக்கும் கடும் கண்டனங்கள் குவிந்தன.