சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமாயணம், மகாபாரதத்தை விமர்சிப்பதா? சீதாராம் யெச்சூரி மீது எச்.ராஜா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: ராமாயணம், மகாபாரதம் ஆகியவை இந்துக்களிடம் வன்முறை குணம் இருப்பதற்கு சாட்சி என விமர்சித்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு பாஜக தேசிய தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா, இந்துக்கள் வன்முறையை ஒருபோதும் நம்புவதில்லை என கூறியிருந்தார். இதற்கு சீதாராம் யெச்சூரி பதிலளித்திருந்தார்.

H Raja condemns Sitaram yechurys comments on hindus

அதில், இந்து மன்னர்கள் போர்களை நடத்தி இருக்கின்றனர். ராமாயணம், மகாபாரதம் ஆகியவை யுத்தங்கள், வன்முறைகளால் நிறைந்து கிடக்கின்றன. இந்துக்களிடம் வன்முறை குணம் இருப்பதற்கு மகாபாரதமும் ராமாயணமுமே சாட்சி என விமர்சித்திருந்தார்.

யெச்சூரியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலின், லெனின், மாவோ உள்ளிட்ட கம்யூனிஸ்ட்க்கள் பல கோடி மக்களை உலகு முழுவதும் கொலை செய்த கொலைகார கூட்டம் என்பதை மறந்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய கொலைகார கம்யூனிஸ்ட் யச்சூரியின் இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கொதித்துள்ளார்.

வழக்கம் போல எச். ராஜாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக அவரது ட்விட்டர் பக்கம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

English summary
BJP National Secretary H Raja has condemned CPM General Secretary Sitaram Yechury's comments on Hindu are violent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X