சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலை உண்டு.. ஆனால் மீன் கிடையாது.. ப.சி.யை கிண்டல் செய்யும் எச் ராஜா!

Google Oneindia Tamil News

சென்னை: மீன் கிடையாது, ஆனால் வலை தரலாம் என சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டு கொசு வலை கொடுக்க அனுமதிக்கப்பட்டதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கிண்டல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் பலமுறை ஜாமீன் கோரியும் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் 5 முறைக்கு மேல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேகாலயாவில் தங்க அரசின் அனுமதி தேவை... புதிய சட்டம்மேகாலயாவில் தங்க அரசின் அனுமதி தேவை... புதிய சட்டம்

கோரிக்கை

கோரிக்கை

இதையடுத்து 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அறிக்கை தாக்கல்

அறிக்கை தாக்கல்

இந்த நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் தேவையா இல்லையா என்பது குறித்து பரிசீலனை செய்ய எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தனது அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

ஜாமீன் மனு தள்ளுபடி

ஜாமீன் மனு தள்ளுபடி

அதில் ப சிதம்பரம் நன்றாகவே உள்ளார். சிறையை சுத்தமாக வைத்துக் கொண்டு கொசுவலை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறப்பு சிகிச்சை ஏதும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்துக்கு கொசு வலை, மினரல் வாட்டர் வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டு இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

வலை உண்டு, மீன் இல்லை

இதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு என தெரிவித்துள்ளார்.

English summary
BJP National Secretary H.Raja criticises P.Chidambaram as court rejects his bail plea in INX Media case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X