சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசியவர் அனுபவிக்கிறார்: வைரமுத்து மீது எச் ராஜா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரமுத்து மீது எச் ராஜா பாய்ச்சல்

    சென்னை: ஆண்டாள் பற்றி அவதூறாக பேசியவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என எச் ராஜா விமர்சித்துள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான ஆண், பெண் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் இதில் பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    100 ஆண்டு பழக்கம்

    100 ஆண்டு பழக்கம்

    கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 100 ஆண்டுகளாக பழகி வரும் பழக்கம் மதிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25ன் படி மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும்.

    கிழித்துக் கொண்டிருக்கிறாள்

    கிழித்துக் கொண்டிருக்கிறாள்

    மத உணர்வும் பண்பாடும் எதிர்க்கப்பட்டால் பொங்கி எழுவோம் என்பதை இந்த கூட்டம் மெய்பித்துள்ளது. ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில் ஆண்டாள் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறாள் என தமிழிசை வைரமுத்துவை சாடினார்.

    கடவுளாக பார்க்கும் மதம்

    கடவுளாக பார்க்கும் மதம்

    அவரை தொடர்ந்து பேசிய எச்.ராஜா இந்து மதத்தில் உள்ளது போல் சமநிலை வேறு எந்த மதத்திலும் இல்லை. பெண்களை கடவுளாக பார்க்கும் மதம் இந்து மதம்.

    ஆயுள் முழுவதும் தாபம்

    ஆயுள் முழுவதும் தாபம்

    இனி குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இந்து என பெயர் சூட்டுங்கள். ஆண்டாள் சாபம் ஆயுள் முழுவதும் தாபம். ஆண்டாளை விமர்சித்தவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என மறைமுகமாக வைரமுத்துவை எச் ராஜா விமர்சித்தார்.

    English summary
    H Raja critizing Poet Vairamuthu for Me Too campaign relating Andal issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X