சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா... ஹெச்.ராஜா கெத்து... தமிழிசையை விட கூடுதல் வாக்குகளை வாங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 5 பாஜக வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை விட ஹெச்.ராஜா கூடுதல் வாக்குகளை பெற்று கெத்து காட்டியுள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்குத் தான் குறைவான வாக்குகள் விழுந்திருக்கிறது. தூத்துக்குடியில் அவர் 2.15 லட்சம் வாக்குகள் பெற்றார். 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி, தமிழிசையை வென்றுள்ளார் .

H.Raja Get More Than votes of BJP State Leader Tamilisai

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதியில் 2.33 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தோற்கடித்தார்.

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை சிவகங்கை தொகுதியில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் சக்தி பிரியா சுமார் 72 ஆயிரம் வாக்குகளை பெற்றார். மேலும், ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 3.87 சதவீதத்தை நாம் தமிழர் கட்சி கைப்பற்றியுள்ளது.

அச்சச்சோ... 18 தொகுதிகளில் நோட்டாவுடன் பாஜக போட்டி அச்சச்சோ... 18 தொகுதிகளில் நோட்டாவுடன் பாஜக போட்டி

பாஜக போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் கன்னியாகுமரியில் தான் அதிகபட்சமாக 35.04% பெற்றுள்ளது. அதே நேரம், கோயம்புத்தூரில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. அங்கு, 3.92 லட்சம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளன. இம்முறை மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜகவுக்கு 3.66% வாக்குகள் கிடைத்துள்ளன. கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 1.44 லட்சம் வாக்குகளைப் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று அசத்தியுள்ளது.

அதே போல், மக்களவை தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4.8 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் தினகரனின் கட்சி டெபாசிட் வாங்கவில்லை. எது எப்படியோ, பாஜக வேட்பாளர்களில், ஹெச். ராஜா, கூடுதல் வாக்குகள் பெற்று மாஸ் காட்டியிருப்பது, கட்சியின் பார்வையை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Election results 2019: H.Raja Get More Than votes of BJP State Leader Tamilisai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X