சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்!

Google Oneindia Tamil News

சென்னை: எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வருபவர் ஜெயமோகன். எழுத்தாளரான இவர் தமிழில் நான் கடவுள், கடல், 2.0, சர்கார் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடையில் தோசைமாவு வாங்கியுள்ளார். மாவு புளித்து போயிருந்ததால் வேண்டாம் என திருப்பிக்கொடுத்தாக தெரிகிறது.

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்! தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்!

தாக்குதல்

தாக்குதல்

அப்போது கடைக்காரருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயமோகன் தாக்கப்பட்டுள்ளார். கடைக்காரருடன் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த சில நபர்களும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கடைக்காரர் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்கப்பட்ட ஜெயமோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எச் ராஜா கண்டனம்

எச் ராஜா கண்டனம்

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜாவும் ஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

தண்டிக்கப்பட வேண்டும்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அவரை தாக்கியவர் எந்த அரசியல் தலையீட்டிற்கும் இடமளிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
BJP national secretary H Raja has condemns for the attack of Writer Jayamohan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X