• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல். முருகன் முகத்தில் மலர்ச்சி.. ஒரு மகிழ்ச்சி.. டெல்லி போன காரியம் நல்லபடியா முடிஞ்சிருச்சாமே!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மாநில தலைவர், எல்.முருகன் டெல்லி போன காரியம் கிட்டத்தட்ட முடிந்தமாதிரி போலிருக்கிறது.. விரைவில் தமிழக பாஜகவில் நல்ல செய்தி வரும் என்றும் நம்பப்படுகிறது.

பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் ஜேபி நட்டா வெளியிட்டார்.. ஆனால், அதில் தமிழகத்தை சேர்ந்த யாருமே நியமிக்கப்படவில்லை.. யாருக்கும் எந்த பொறுப்பும் தரப்படாதது பெரும் அதிர்ச்சியை தந்தது.

குறிப்பாக சட்டசபை தேர்தல் வரும் சமயத்தில், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோரின் பெயர்களும் லிஸ்ட்டில் இல்லை.

நான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சீனியர்கள்

சீனியர்கள்

சீனியர்களான இவர்களுக்கு எந்த பொறுப்பும் தராதது கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோல, தீவிரமாக கட்சி பணியாற்றி வந்த கேடி ராகவன், வானதி சீனிவாசன், உள்ளிட்டோரும் தங்களுக்கு பொறுப்பு எதுவும் தரப்படவில்லை என்பதால் வருத்தம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

எதற்காக இப்படி புறக்கணிக்கப்படுகிறோம்? பெரிய பொறுப்புகள் தந்தால்தான், சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரத்துக்கு போவோம் என்றும் அதிருப்தி தலைவர்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி உள்ளதாகவும் தெரிகிறது.. இதையடுத்தே முருகனின் டெல்லி பயணம் துரிதமானது.. 3 நாள் அங்கேயே தங்கி முகாமிட்டார்.

 பேட்டி

பேட்டி

பாஜவின் செயல் தலைவர் நட்டாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தும் பேசியிருக்கிறார்.. அப்போது தமிழக அரசியல் சூழல் உட்பட முக்கிய நிர்வாகிகள் பொறுப்பு உள்ளிட்டவற்றை குறித்தும் விவாதித்ததாக தெரிரகிறது. இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் கட்சியை எந்த விதத்தில் வழி நடத்துவது என்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை அவர் வழங்கியுள்ளார்... தேசிய நிர்வாகிகள் பட்டியல் இன்னும் முழுமை அடையவில்லை. அதனால் தமிழகத்தை சார்ந்தவர்கள் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்.

 தேர்தல்

தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கி விட்டது என நிச்சயமாக கூற முடியும்... அதன் அடிப்படையில் தற்போது பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணியானது நடந்து வருகிறது. இதில் தேர்தல் முடிந்த பின்னர் அமைச்சரவையில் இடம் கேட்பது குறித்து கட்சி தலைமையிடம் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

முருகன்

முருகன்

தமிழகத்தை சார்ந்தவர்கள் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன் என்று முருகன் சொன்னாலும், கிட்டத்தட்ட இது உறுதியான தகவல் போல தெரிகிறது.. ஏனென்றால், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த எல்.கணேசன், "தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் பாஜகவில் தேசிய அளவில் பொறுப்புகளில் உள்ளனர்.. எச்.ராஜாவின் திறமைக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்.. அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்" என்று சொல்லியிருந்த நிலையில், அநேகமாக முருகன் டெல்லி சென்ற காரியம் சுபம்தான் போல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 விரிவாக்கம்

விரிவாக்கம்

இதனிடையே, தமிழக பாஜகவினரின் அதிருப்தியை உணர்ந்த, கட்சி மேலிடம் ஓரிரு தலைவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர், தேசிய ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. அநேகமாக பீகார் தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், அதில் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
H Raja may get good post soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X