சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ... சட்டத்தில் ஓட்டையாம்...சொல்வது சட்டாம்பிள்ளை எச். ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு பரிசீலனை... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு ஏற்பு...

    சென்னை: நீதிமன்றத்தால் தேசதுரோகி என உறுதி செய்யப்பட்ட நபர் ராஜ்யசபா எம்.பி.யாவது சட்டத்தின் ஓட்டை என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்துள்ளார். இதற்கு வைகோ ஆதரவாளர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை 1 மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    H Raja opposes to Vaiko as Rajyasabha MP

    சுதந்திர இந்தியாவில் தேசதுரோக வழக்கில் முதல் முறையாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர் வைகோ. இதனிடையே வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    இதனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது நேற்று வைகோவின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 23 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் வைகோ மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.

    இதனை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா. சட்டத்தில் ஓட்டை என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு வைகோ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

    English summary
    BJP National Secretary H Raja has opposed MDMK General Secretary Vaiko was elected to Rajyasabha MP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X