சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது நான் வடமாநிலத்தவரா.. நெட்டிசன் கேள்விக்கு பயோடேட்டாவை வெளியிட்ட எச் ராஜா!

Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு- வீடியோ

    சென்னை: நான் வடமாநிலத்தவர் இல்லை என்றும் எனது ஊர் எதுவென பல முறை கூறியுள்ளதாகவும் எச் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    பாஜக தேசிய செயலாளரும் சிவகங்கை எம்பி வேட்பாளருமான எச் ராஜா டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். ஒன்று அவராக எதையாவது போட்டுவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி கொள்வார்.

    H.Raja replies in tweet that a netisan asks whether he belongs to North India

    இல்லாவிட்டால் கேள்விகள் மூலம் அவரின் வாயை பிடுங்கி அதில் வரும் பதிலை வைத்து அவரை கலாய்ப்பது இன்னொரு ரகம். இந்த நிலையில் அவர் தனது டுவிட்டரில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் JC பச்சையப்பன் உண்டியலிலிருந்து பணத்தை திருடி Pant பாக்கெட்டில் திணித்துக் கொள்ளும் படம் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் வந்துள்ளது.

    இந்து கோவில் பணியாளர்கள் சங்கம் ஆதாரத்துடன் ஆணையரிடம் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை இல்லை என தெரிவித்திருந்தார்.

    எச்.ராஜா இப்படி பேசலாமா.. ஊரே ஒன்று திரண்டது.. போலீசில் பரபரப்பு புகார் எச்.ராஜா இப்படி பேசலாமா.. ஊரே ஒன்று திரண்டது.. போலீசில் பரபரப்பு புகார்

    இந்த டுவீட்டுக்கு சார் நீங்கள் வடமாநிலத்தவரா என ஒருவர் எச் ராஜாவுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எச் ராஜா பதிலளிக்கையில் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன்.எனக்கு தஞ்சை அகரமாங்குடி பூர்வீகம்.

    பக்கத்து ஊர் மெலட்டூரில் பிறந்தவன். கோவத்தகுடி தெண்ணாயிர ஐயனார் என் குலதெய்வம். என் பாட்டனார் பெயர் சிவ சிதம்பரம். அவரது தந்தை பெயர் விருத்தாஜலேஸ்வரர். இப்பெயர்கள் வெளிமாநிலத்தில் உண்டா. பல முட்டாள்கள் பொய் பரப்புகின்றனர் என எச் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP National Secretary H.Raja says he belongs to South India for a netisan's asking H.Raja that Whethere he belongs to North India?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X