சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 2 மாசம்தான் ராசா இப்படி பேச முடியும்.. எச். ராஜா போட்ட டிவீட்டுக்கு நெட்டிசன்கள் கிண்டல்

முக ஸ்டாலினுக்கு எச்.ராஜா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Netisons slams H. raja tweet | எச். ராஜா போட்ட டிவீட்டுக்கு நெட்டிசன்கள் கிண்டல்

    சென்னை: "இப்படித்தான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா" என்று முக ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காரசார ட்வீட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

    நேற்று திமுக தென்மண்டல மாநாட்டில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும்போது, அதிமுக-பாஜக கூட்டணியை சரமாரியாக சாடி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதில், பாஜக தாக்கு கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

    H Raja replies to MK Stalin

    குறிப்பாக, "நரேந்திர மோடி அவர்களே, அதிமுக-பாஜக-பாமக கூட்டணிதான். மதவாத - சாதியவாத -சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளையடிப்பது உங்கள் இலட்சியம்.
    உங்களை விரட்டி நாட்டைக் காப்பாற்றுவதே எங்கள் இலட்சியம்!" என்றார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

    இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. சுதாரித்தால் நல்லது! இப்படியே போனால் தேமுதிகவுக்கு தேமுதிகவே முடிவுரை எழுதி விடும்.. சுதாரித்தால் நல்லது!

    ஸ்டாலினின் இந்த பேச்சும், ட்வீட்டும் எச்.ராஜாவுக்கு எட்டிவிட்டது. உடனடியாக மேற்கூறிய ஸ்டாலினின் ட்வீட்டை அப்படியே தனது ட்விட்டரில் எடுத்து பதிவிட்டு, அதற்கு ஒரு கேள்வியும் மறக்காமல் எழுப்பி உள்ளார்.

    அதில் எச்.ராஜா, "ஆமாம் முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சி. VCK மற்றும் KMDK, IJK இதெல்லாம் சாதிகட்சிகள் இல்லையா? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா?" என்று கேட்டுள்ளார்.

    எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு கீழே, "அது வேற ஒன்னுமில்லை.. பிரதம்மரு பேசும்போது இல்லாத கூட்டம் ஸ்டாலின் பேசும் போது இருக்கேங்கிற வெறுப்பு தான்" என்றும், "ராசா....இன்னும் இரண்டு மாசம் மட்டும் தான் இப்படி நீங்க பேச முடியும்" என்பன போன்ற கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    BJP H Raja questioned MK Stalin about DMK-VCK-KMDK-IJK Alliance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X