• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தமிழகத்திலும் பாஜக ராஜாதான்" எச். ராஜாவே சொல்லிட்டார்.. திமுக, அதிமுக கேட்டுச்சா?!

|

சென்னை: யார் எத்தனை பேர் தன் மீது போலீஸ் புகார் தந்தாலும் சரி, எதை பற்றியும் கவலைப்படாமல் கெத்துடன் பேசுவதுதான் எச்.ராஜாவின் ஆல்டைம் ஸ்பெஷல்.. "டெல்லியில் மட்டும் பாஜக ராஜா இல்லை. தமிழகத்திலும் பாஜக ராஜாதான்" என்று ஒரு பஞ்ச் பேசி இருக்கிறார்.

பாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா வழக்கமாக எச்.ராஜா பேசினாலே வன்முறை கொப்பளிக்கும், சர்ச்சைகள் தெறிக்கும்.

தன் ட்விட்டர் பக்கத்தை எந்நேரமும் ஹாட்டாக வைத்திருக்க எச்.ராஜாவால் மட்டுமே சாத்தியம். 2 நாளைக்கு முன்புகூட ராமநாதபுரம் கொலை சம்பந்தமாக ஒரு ட்வீட் போட, அது இன்னும் பற்றி கொண்டு எரிந்து வருகிறது.. எச்.ராஜா மீது போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.

மதிமுக துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை மறைவு.. பேரிடி தலையில் விழுந்துவிட்டது.. வைகோ வேதனைமதிமுக துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை மறைவு.. பேரிடி தலையில் விழுந்துவிட்டது.. வைகோ வேதனை

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அதேசமயம், எச்.ராஜா நிறைய படித்தவர், நல்ல அறிவாளி.. கட்சியின் சீனியர்.. டெல்லி மேலிடத்துடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பவர்.. ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையை இன்னமும் கெட்டியாக பிடித்து கொண்டிருப்பவர்.. வரும் நவம்பரில் ரஜினி, கட்சியை ஆரம்பிப்பார் என்று வழக்கமான ஒரு பரபரப்பு நேற்றும் கிளம்பியது. இது குறித்தும், இன்னபிற விஷயங்கள் குறித்தும் மதுரை வந்த எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அப்போது அவர் பேசியது இதுதான்:

தமிழ்நாடு

தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக வரும்... இந்த கோவில்களில் தமிழக அரசு தணிக்கை அதிகாரிகளை கொண்டு தணிக்கை செய்ய உட்படுத்த வேண்டும். இரண்டு ஆன்மீக கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறு கிடையாது.. ரஜினி ஆன்மீக அரசியல் எங்களுடன் இணைந்து செயல்படலாம்... அல்லது, அவருடைய கொள்கை எங்கள் பாஜகவுடன் ஒத்து போகலாம்... ரஜினி இணைவது அவரது விருப்பம்.. ஆனால், டெல்லியில் மட்டும் பாஜக ராஜா இல்லை. தமிழகத்திலும் பாஜக ராஜாதான்.

 அத்தைக்கு மீசை முளைத்தால்...

அத்தைக்கு மீசை முளைத்தால்...

சசிகலா இந்த மாதம் விடுதலை ஆகி வருகிறாரே என்று அதை பற்றி கேட்டதற்கு, "அதான் இந்த மாசம் வருகிறார் என்பது உங்களுக்கே தெரியுதே... கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே.. அவர் விடுதலையாகி வந்தால் பாஜகவுடன் கூட்டணி நிலைப்பாடு என்ன என்று கேட்கிறீர்கள்? அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம்... அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம்... தம்பியாக இருந்தால் சித்தப்பா, தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே.... அவர் அத்தையாக தான் இருப்பார்... சித்தப்பா ஆக முடியாது...அத்தைக்கு மீசை முளைத்தால் பாஜக ஆதரவு தரும்" என்றார் எச்-.ராஜா.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இந்த பேட்டியின் மூலம் 2 விஷயங்கள் தெளிவாகிறது.. சசிகலா விடுதலை பற்றி சு.சாமி எந்நேரமும் பேசி கொண்டிருக்கிறார், அவரது ஆளுமை பற்றியும் பல்வேறு இடங்களில் பதிவு செய்து வருகிறார்.. அதனால் எப்படியும் பாஜகவின் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை இவ்வளவு நாள் தென்பட்டு வந்தது.. ஆனால், திடீரென எச்.ராஜா சசிகலா பற்றி இப்படி சொன்னது, ஆச்சரியமாகவே உள்ளது.

  Madhuvanthi Speech | Justice For Saravanan | Oneindia Tamil
   எச்.ராஜா

  எச்.ராஜா

  மற்றொன்று, இன்னமும், ரஜினி மீதான நம்பிக்கை பாஜகவுக்கு குறையவில்லை என்பதும் தெரிகிறது.. ரஜினி ஏதாவது சர்ச்சையாக பேசிவிட்டால், ஓடிவந்து முட்டு தருவார் எச்.ராஜா.. அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை உடையவர்.. அந்த நம்பிக்கை இப்போது மேலும் அதிகமாகி உள்ளது என்பதும் எச்.ராஜாவின் பேட்டியில் புரிகிறது.

  ஆனால், "டெல்லியிலும் பாஜக ராஜாதான், தமிழகத்திலும் பாஜக ராஜாதான்" என்று சொல்கிறார்.. இதுதான் நமக்கு லேசா உதைக்கிறது!

  English summary
  H Raja says BJP is the king in Tamil Nadu too
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X