சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சி. அப்போது பேசியது நல்ல வாயா?.. இப்போது பேசுவது வேற வாயா?.. எச் ராஜா கலாய்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அப்போது பேசியது நல்ல வாயா இல்லை இப்போது பேசுவது வேற வாயா என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த போது ஜாமீன் மனு தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர். ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த கேள்விகளை முன்வைத்த போது அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் 5 சதவீதம் என்றால் என்ன ஞாபகம் இருக்கிறதா என சிரித்துக் கொண்டே கேட்டார்.

மோசம்

மோசம்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் வேகமாக அழைத்து சென்றனர். இந்தியாவின் ஜிடிபி மதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

ரொம்ப கொடுமை.. உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தபோதே பலியான பிரபல பாடகர்.. திக், திக் காட்சிரொம்ப கொடுமை.. உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தபோதே பலியான பிரபல பாடகர்.. திக், திக் காட்சி

பாஜகவுக்கு அதிர்ச்சி

பாஜகவுக்கு அதிர்ச்சி

சிபிஐ காவலில் உள்ள போதிலும் சிதம்பரம் போகிற போக்கில் கிண்டலடித்தது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா சந்தித்தார்.

விரைவில் தலைவர்

விரைவில் தலைவர்

அப்போது அவர் கூறுகையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்வில் எந்த இழுபறியும் இல்லை. விரைவில் பாஜக தமிழக தலைவர் யார் என்று தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்.

ஜிடிபி

ஜிடிபி

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போதும் நாட்டின் ஜிடிபி 5% இருந்தது. அதை அவர் நல்ல பொருளாதாரம் என்று கூறியிருக்கிறார். அப்போது பேசியது நல்ல வாயா? இப்போது பேசுவது வேற வாயா? ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி சாதாரணமானது என அத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர் என்றார் ராஜா.

English summary
BJP National Secretary H.Raja says GDP was 5% when P.Chidambaram was Finance Minister. He says it was good economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X