• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா

|
  H.Raja Tweets | வைரமுத்து, சற்குணம் , லாசரஸை கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா- வீடியோ

  சென்னை: "தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ் போன்றவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

  ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது வைரமுத்துவை அதிகமாக விமர்சித்தது எச்.ராஜாதான். "நாம் மானங்கெட்டு போயிருப்பதால் வைரமுத்து இப்படி பேசியிருக்கிறார் என்கிறேன் நான்.. என்று ஆவேசமாக பேசியவர்.

  மனைவியை விட்டு கவிதை எழுதச் சொல்லி, அதை புத்தகமாக்கி வியாபாரம் செய்பவர் எல்லாம் கவிப்பேரரசா? என ஒருமையில் திட்டித் தீர்த்தவர்தான் எச்.ராஜா.

  தமிழாற்றுப்படை

  தமிழாற்றுப்படை

  இந்நிலையில், சமீபத்தில் "தமிழாற்றுப்படை" என்ற ஆராய்ச்சி கட்டுரை நூலினை வைரமுத்து வெளியிட்டிருந்தார். இதில் இந்து கடவுளை வைரமுத்து இழிவாக குறிப்பிட்டுள்ளதாக எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்து கடவுள்களுக்கு எதிராக பேசிவரும், வைரமுத்து உள்ளிட்ட மோகன் சி லாசரஸ், எஸ்ரா சற்குணம் போன்றவர்களை அரசு கைது செய்ய வேண்டும் என்றும் சொல்லி இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் எச்.ராஜா பேசியிருப்பதாவது:

   உளற ஆரம்பித்துள்ளார்

  உளற ஆரம்பித்துள்ளார்

  "தமிழாற்றுப்படை" என்கிற பெயரிலே மீண்டும் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயலில் கவிஞர் வைரமுத்து இறங்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எம்பெருமான் ராமனை பைத்தியக்காரர் என்பாராம். இவர் செக்‌ஷன் 84-க்கு கீழே உள்ள தப்பித்து கொள்ளவே இப்படி உளற ஆரம்பித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்டாள் நாச்சியாரை அருவெருக்கத்தக்க வார்த்தைகளால் அர்ச்சித்த குற்றவாளி. தொடர்ந்து குற்றங்களை இழைப்பவர்களுக்கு ஒரு பெயர் உண்டு.. habitual offender..ன்னு

   முதுகெலும்பு உண்டா?

  முதுகெலும்பு உண்டா?

  இதற்கு என்ன செக்‌ஷனில் தண்டனை என்பதை திருமதி நளினி சிதம்பரத்துக்கு கிட்ட இவர் கேட்டு தெரிஞ்சிக்கிறது நல்லது. கிறிஸ்தவ மதமாற்றும் சக்திகளின் கைக்கூலியாக செயல்படும் வைரமுத்து போன்றவர்களை பார்த்து நான் கேட்கிறேன், உங்களுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மத கடவுள்களை பற்றி பேசுவதற்கு முதுகெலும்பு உண்டா? பேச முடியுமா?

   எஸ்ரா சற்குணம்

  எஸ்ரா சற்குணம்

  எஸ்ரா சற்குணம் என்கின்ற ஒரு பாதிரியார் சொல்கிறார், "இந்துக்களின் முகத்தில் ஒரு குத்து குத்து.. ரத்தம் வரணும்.. அவன் இந்து இல்லைன்னு சொல்லுவான் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். ஆனால் இவரை அரசாங்கம் இதுவரை கைது பண்ணல. அதனால்தான் வைரமுத்துவுக்கு துணிச்சல் வந்ததோன்னு தெரியல.

   மோகன் சி லாசரஸ்

  மோகன் சி லாசரஸ்

  அதேபோல, மோகன் சி.லாசரஸ் என்ற மதமாற்றும் பாதிரி இருக்கிறார். கும்பகோணத்தில போய் பாருங்க.. இந்துக்களின் கோயில் சாத்தானின் கூடாரங்கள் என்று பேசியதற்கு தமிழக அரசு இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, கைது செய்யவில்லை என்று தெரியவில்லை. அதேபோல, ஆண்டாள் நாச்சியாரை பற்றி பேசி, இந்துக்களை திட்டமிட்ட ரீதியில் புண்படுத்தியபோது தமிழகமே திரண்டு வந்தது.

  கோரிக்கை

  ஆனால் இந்துக்களை திட்டமிட்ட ரீதியில் புண்படுத்துகிற, habitual offender-க்கு எதிரான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காத காரணத்தினால் இன்றைக்கு "நானும் சித்தபிரமை கொண்ட பைத்தியம்தான், அதனால் இபிகோ 84-ன்கீழ் என்னையும் கைது செய்துவிட வேண்டாம்" என்று கேட்பதற்காகவே இப்படி பேசினாரா என்றும் தெரியவில்லை. இந்து விரோத தீய சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

   
   
   
  English summary
  H Raja says that, TN gov should arrest Vairamuthu, Mohan C. Lazarus, Ezra sargunam for speaking out against Hinduism
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X