சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது அஜித்திற்கு நூல் விடறோமா.. அதெல்லாம் நாங்க நூலும் விடலை, கயிறும் விடலை..எச் ராஜா அடடே பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் அஜித்திற்கு நாங்கள் நூலும் விடவில்லை, கயிறும் விடவில்லை என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர். அப்போது அஜித்திற்கு ஐஸ் வைப்பது போல் தமிழிசை அவரை புகழ்ந்து பேசி தள்ளினார்.

இந்த புகழ்ச்சி நடந்த அந்த நாளே அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் அஜித் அறிக்கை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராமங்களுக்கு

கிராமங்களுக்கு

இந்நிலையில் சென்னை மாதவரத்தில் திருமண விழா ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் அப்போது கிராமங்களுக்கு போகாமல் இப்போது என்ன செய்ய பேகிறார்?

தேர்தலை நிறுத்த

தேர்தலை நிறுத்த

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நடத்தாத கூட்டத்தை இப்போது நடத்தி என்ன ஆக போகிறது?. திருவாரூர் தேர்தலை சந்திக்க பயந்து திருமாவளவன், டி.ராஜா,கபில் சிபல் போன்றவர்களை பயன்படுத்தி தேர்தலை நிறுத்த செய்த ஸ்டாலின் கிராம கூட்டம் நடத்துவது ஏன்?

கருப்பு கொடி

கருப்பு கொடி

லயோலா கல்லூரி வீதி விருது விழாவில் நாட்டின் அசோக தூண் அசிங்கப்படுத்தபட்டுள்ளது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் எவ்வாறு பங்கு பெற்றார். 27-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு மே 17 இயக்கம் கருப்பு கொடி காட்டினால் பார்க்கலாம்.

தேச விரோத சக்திகளின்

தேச விரோத சக்திகளின்

நடிகர் அஜித்திற்கு நூலும் விடவில்லை. கயிறும் விடவில்லை. பாமகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட டோல்கேட் முருகன் என வேல்முருகனை விமர்சித்தார். திருச்சியில் நடக்கிற கூட்டம் தேச விரோத சக்திகளின் பிரிவினைவாத சக்திகளின் ஒட்டுமொத்த கூட்டம் என்றார் எச் ராஜா.

English summary
BJP National Secretary H.Raja says that we are not trying to pull Ajithkumar in no way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X