சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைது செய்தால் பதற்றம் வரும் என மிரட்டும் கமல்தான் தீவிரவாதி.. எச். ராஜா கோபம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal About Aravakurichi rally: அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் பரபரப்பு டிவிட்- வீடியோ

    சென்னை: தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் பொதுமக்களுக்கும் தேசத்திற்கும் நேர்மையாக இருக்க முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நடிகர் கமல்ஹாசனை சாடியுள்ளார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார். இந்தியா முழுவதும் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

    இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறு இல்லை என்றார்.

     இது அக்னிப் பரிட்சை.. அமைதியாக இருங்கள்.. அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் டிவிட்! இது அக்னிப் பரிட்சை.. அமைதியாக இருங்கள்.. அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் டிவிட்!

    கைது செய்தால்

    கைது செய்தால்

    தான் பேசியது சரித்திர உண்மை தான் என்ற அவர், வேண்டுமானால் தன்னை கைது செய்துகொள்ளட்டும் என்றார். ஆனால் தன்னை கைது செய்தால் பதற்றம் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.

    நான் சொன்னால்..

    இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்
    தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் பொதுமக்களுக்கும் தேசத்திற்கும் நேர்மையாக இருக்க முடியாது என்று நான் சொன்னால் என்ன தப்பு என சாடியுள்ளார்.

    கமல் தீவிரவாதி

    மற்றொரு டிவிட்டில் கமல் தீவிரவாதி என விளாசியுள்ளார். மேலும் நவகாளியில் உங்கள் கூட்டாளிகளால் கொல்லப்பட்ட இந்துக்களின் மிச்சம் மீதி கண்டு மகிழுங்கள் என்று போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

    பேசத் தடை

    பேசத் தடை

    கமலின் கருத்து குறித்து அரசியல் தலைவர்கள் பேச வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இருப்பினும் கமலும் தொடர்ந்து பேசிவருகிறார், அதற்கு எதிர்வினையும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    H Raja slams actor Kamal hassan for talking hindus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X