சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதை விடுங்க.. வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலை.. அவர் வர மாட்டார்.. போட்டு தாக்கும் எச்.ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபை முற்றுகைப் போராட்டம்.. குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.. போலீஸ் குவிப்பு - வீடியோ

    சென்னை: "வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலே? வர மாட்டார்.. உங்களை பகடை காயாக ஆக்கி, பிண அரசியலுக்கு திட்டமிடுகிறார்கள்.. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை போன்றவர்கள் சும்மா இருக்கோம் என்று ஸ்டாலினுக்கு எச்சரிக்கிறேன்" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

    சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.. அதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையிலும் போராட்டம் நடந்தபோது, வன்முறை வெடித்தது.

    அது தொடர்பான கண்டனங்கள், எதிர்ப்புகள், தொடர்ந்து 6-வது நாளாக நடந்து வருகின்றன. இதனிடையே குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், அதன் குறிக்கோள் குறித்தும் பாஜக தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் இது தொடர்பாக பேசி வருகிறார். அந்த பதிவுகளை தன்னுடைய ட்விட்களிலும் பதிவிடுகிறார். அவைகளில் எச்.ராஜா பேசியது இதுதான்: "தூத்துக்குடியில துப்பாக்கி சூடு நடந்துச்சே, சீமான் போனாரா? ஜெயராமன் போனாரா? பூவுலக நண்பர்கள்.. எங்கே போனாங்க? வண்ணாரப்பேட்டைக்கு ஏன் ஸ்டாலின் வரலே? வர மாட்டார்.. உங்களை பகடை காயாக ஆக்கி, பிண அரசியலுக்கு திட்டமிடுகிறார்கள்.

    சட்டவிரோதம்

    சட்டவிரோதம்

    அதனால் திராவிட முன்னேற்ற கழகத்தை முஸ்லீம் சகோதர சகோதரிகளே புறக்கணியுங்கள். போராட்டமே சட்டவிரோதம்.. உங்களுக்கு என்ன பாதிப்புன்னு கேட்கிறேன்.. போராடுபவர்களுக்கு சொல்கிறேன், இந்த நாட்டில் இருக்கின்ற 130 கோடி மக்களில் யாராவது ஒருத்தருக்கு பாதிப்பு உண்டா? சொல்லுங்க.. அறிவுப்பூர்வமாக சொல்லுங்க.. உணர்வுப்பூர்வமாக தூண்டணும்னு நினைச்சா எதிரணியிலும் தூண்ட முடியும்...

    இலவச இணைப்புகள்

    இலவச இணைப்புகள்

    ஆகவே திமுக, அதனுடைய இலவச இணைப்புகளான திருமாவளவன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் யாரா இருந்தாலும் சரி, நீங்க தூண்டிவிட்டு தமிழகத்தை கலவர பூமியாக மாத்த நினைச்சா, எதிர்வினையாற்ற எல்லாருக்குமே தெரியும்... அமைதி காக்க வேண்டும். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை போன்றவர்கள் சும்மா இருக்கோம் என்று ஸ்டாலினுக்கு எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை

    அதேபோல, இன்னொரு வீடியோவில் எச்.ராஜா பேசும்போது, "உண்மையிலேயே 300-400 வருடங்களுக்கு முன்பாக, அமெரிக்காவில குடியுரிமை என்பதற்கு போராட்டம் கிடையாது, சர்ச்சை கிடையாது, வன்முறை கிடையாது.. ஆனால் இந்த தேசத்துக்கும் சீனாவுக்கும் எல்லை இன்றுவரை வரையறுக்கப்படவில்லை.. இந்த தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லை வரையறுக்கப்படவில்லை.

    கால்டுவெல்

    நாம் யாரென்று நமக்கு தெரியல.. நமது எல்லை என்ன என்று நமக்கு தெரியல.. குடியுரிமைக்கு ஒருமைப்பாடு வேணும்னு சொன்னா, அதைகூட நாங்க ஏத்துக்க மாட்டோம்னு இரவிலே வன்முறை போராட்டங்கள் வந்துள்ள அளவுக்கு பிரிவினை வாத விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.. தமிழ்நாட்டில் அந்த விதை, 1838-ல் முதல் விதைக்கப்பட்டது.. அப்போதுதான் மதமாற்றுவதை தன்னுடைய மிஷினாக கொண்ட, மிஷினரி கால்டுவெல் பாதம் பதித்த தினத்திலே பிரிவினைவாதம் உருவானது" என்கிறார்.

    English summary
    bjp senior leader h raja slams dmk leader mk stain over vannarapettai issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X