சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக ஒரு ருசி கண்ட பூனை.. இனி எந்த வேஷமும் போட முடியாது.. எச்.ராஜா அட்டாக்

திமுக தலைவர்களை எச்.ராஜா கடுமையாக சாடி பேட்டி அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக, காங்கிரஸ் பிரமுகர்களுக்குச் சொந்தமான பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயம்-ஹெச்.ராஜா

    சென்னை: இனிமேலும் தமிழகத்தில் திமுகவினர் இந்தி எதிர்ப்பு வேஷம் போட பாஜக அனுமதிக்காது என்றும் திமுக ஒரு ருசி கண்ட பூனை என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிக்கையாளர்களை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

    தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு அதிக எம்பிக்களை கொடுத்திருந்தால் தற்போது மத்திய அமைச்சரவையில் 8-ல் இருந்து 10 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

    ஊடகங்களில் இனி தாராளமா பேசலாம்.. கருத்து தெரிவிக்கலாம்.. தடையை நீக்கியது அதிமுக! ஊடகங்களில் இனி தாராளமா பேசலாம்.. கருத்து தெரிவிக்கலாம்.. தடையை நீக்கியது அதிமுக!

    குடிநீர்

    குடிநீர்

    தமிழகத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதற்கான காரணம் திமுகதான். அந்த ஆட்சியின்போது 620 ஏரிகளை கபளீகரம் செய்ததன் விளைவாக தற்போது சென்னை மக்கள் மிகுந்த குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    சால்ஜாப்பு

    சால்ஜாப்பு

    ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவேன்னு அமைச்சர் சொல்லி இருக்கார். அதை வரவேற்கிறேன். அதேபோல, திமுக தலைவர்கள் ஒன்று செய்யலாம். அவர்கள் நடத்தும் சாராய பேக்டரிகளில், மழை பெய்யும் வரை மது உற்பத்தி செய்ய மாட்டோம்னு முடிவெடுத்தாலே போதும் பல லட்ச கணக்கான லிட்டர் குடிநீர் மிச்சமாகும். அதனால பாராளுமன்றத்தில் நாங்களும் பேசறோம்னு சொல்லி எந்த சால்ஜாப்பும் செய்ய வேணாம்.

    ருசி கண்ட பூனை

    ருசி கண்ட பூனை

    திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ருசி கண்ட பூனை. தமிழகத்தில் திமுகவினர் இனிமேலும் இந்தி எதிர்ப்பு வேஷம் போட பாஜக அனுமதிக்காது. திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் மாணவர்கள் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தி எதிர்ப்பு என கூறி வேஷம் போடுகிறார்கள். திமுகவினர் தமிழ்மொழி துரோகிகள்" என்றார்.

    பட்டியல்

    பட்டியல்

    முன்னதாக, திமுக ஆட்சியின்போது எந்தெந்த ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்ற நீண்ட பட்டியலை செய்தியாளர்களிடம் பொறுமையாக வாசித்து காட்டினார் எச்.ராஜா.

    English summary
    H Raja has criticized DMK Mps and says about Hindi language in Karaikudi Pressmeet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X