சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்வாதிகாரி இந்திரா... இந்திராவின் அடிமை குலாம் நபி ஆசாத்... எச் ராஜா கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: டி ராஜாவும், குலாம் நபி ஆசாத்தும் சர்வாதிகாரி இந்திராவின் அடிமைகள் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டால் விவிபேட்டில் பதிவாகியுள்ள ஒப்புகை சீட்டுகளை நூறு சதவீதம் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் 22 எதிர்க்கட்சிகள் நேற்று மாலை கூட்டாக மனு அளித்துள்ளன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு தலைமையில் டெல்லியில் 22 எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தரப்பில் குலாம்நபி ஆசாத், அகமது படேல், திமுக சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த தடபுடல் விருந்து.. மோடி மட்டும் அப்செட் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த தடபுடல் விருந்து.. மோடி மட்டும் அப்செட்

கூட்டாக மனு

கூட்டாக மனு

கூட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாஜகவுக்குதான் சாதகமாக உள்ளது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்திராகாந்தி சர்வாதிகாரி

இந்திராகாந்தி சர்வாதிகாரி

இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தேசிய செயலாளர், எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 1975 ஆம் ஆண்டு நெருக்கடியை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைத்த சர்வாதிகாரி என்றும் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா இந்திராவின் அடிமைகள் என்றும் கூறியுள்ளார்.

கண்டனம்

மேலும் இவர்கள் 22 கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து கலவரச் சூழ்நிலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். அவர்களின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் எச் ராஜா தனது ட்விட்டில் கூறியுள்ளார்.

அனலிடிகா வழிகாட்டுதல்

தனது மற்றொரு ட்விட்டில் 2014 தேர்தல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடைபெற்றது. ஆனால் பாஜகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆனையரிடம் சென்று கூச்சல் எப்பவில்லை. மக்களிடம் கலவரத்தை தூண்டும் விதமாக பேசவில்லை. கேம்பிரிட்ஜ் அனலிடிகா வழிகாட்டுதல் படியே இவர்கள் நடந்து வருகின்றனர் என்றும் எச் ராஜா விமர்சித்துள்ளார்.

English summary
H Raja slams Ghulam Nabi Azad and D Raja and including 22 political parties for giving petition to Election commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X