சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமலுக்கு சின்னம் ஒதுக்கியதுக்கே பாஜக இப்படி பதறுதே.. தேர்தல் முடிஞ்சதும் என்னென்ன ஆக போகுதோ!

கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு எச்.ராஜா சரமாரியாக பதிலடி தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

ன்னை: "பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை" என்று கமல்ஹாசனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்துக்கான பேட்டரி டார்ச் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் எதற்காக பாஜக இந்த விஷயத்தில் கமலை சீண்ட ஆரம்பித்ததோ தெரியவில்லை, முதல் ஆளாக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

"பேட்டரி லைட் கொடுத்திருக்கிறார்கள். அதனை வைத்தாவது கட்சியைக் கண்டுபிடிக்கட்டும்" என்று கூறியிருந்தார். உடனே செய்தியாளர்கள் இதை பற்றி கமலிடம் கேட்டனர். அதற்கு கமல் சொன்னதாவது:

இறங்கி வந்த தேமுதிக.. மரத்தில் ஏறிய தமாகா.. அதிமுக கூட்டணியில் ஒரே தமாஷ்தான்! இறங்கி வந்த தேமுதிக.. மரத்தில் ஏறிய தமாகா.. அதிமுக கூட்டணியில் ஒரே தமாஷ்தான்!

 நோட்டா சின்னம்

நோட்டா சின்னம்

"எந்தக் கட்சி என்று சொல்லவில்லை என்றால், அநேகமாக அவர்கள் கட்சி என்றுதான் நினைக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே நோட்டாவில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் அந்த கட்சியை தேடித்தான் கண்டுபிடிக்கணும். அதற்கு இந்த டார்ச் பயன்படும். ஏனென்றால் மக்களும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நோட்டாவில் மிச்சமிருக்கும் கட்சியை வெளியே அனுப்புவதற்கு, அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்" நறுக்கென நோஸ்கட் பதிலை தந்தார்.

 எச்.ராஜா பதில்

எச்.ராஜா பதில்

உடனே தமிழிசையும் விடாமல், "டார்ச் லைட்டில் பேட்டரி தீர்ந்தால் கமல் என்ன செய்வார்?" என்று நக்கலாக கேள்வி எழுப்பினார். இப்போது அவரை தொடர்ந்து எச்.ராஜாவை கமல் ட்விட்டர் பக்கத்தில் விளாசி எடுத்திருக்கிறார். அநேகமாக பொன்.ராதாவுக்கு கமல் அளித்த பதிலால் எச்.ராஜா டென்ஷன் ஆகியிருப்பார் என தெரிகிறது. அதற்காகவே இந்த பதிலை பதிவிட்டது போல உள்ளது.

முதுகெலும்பில்லாத நத்தை

அந்த ட்வீட்டில், "விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஏன் இவ்வளவு காட்டம்?

ஒரு கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவது சாதாரணமான, இயல்பான, நடைமுறையில் உள்ள விஷயம்தான். ஆனால் கமலுக்கு சின்னம் ஒதுக்கியதை மட்டும் பாஜக ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தி வருகிறது என தெரியவில்லை. ஆனால் பொன்.ராதாவுக்கு பதில் சொன்ன கமல், இனிமேல், தமிழிசைக்கும், எச்.ராஜாவுக்கும் சேர்த்து வைத்து என்ன பதிலடி தரபோகிறார் என்பதை பார்ப்போம்.

English summary
BJP National Secretary H Raja has replied to MNM Kamalhasan's Comment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X