சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சி.என். அண்ணாதுரையே இந்து விரோதிதானே.. எச். ராஜா பொளேர் டிவீட்!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையே கூட ஒரு இந்து விரோதிதான் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.

கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தது, இந்துக் கடவுள்களை அவமதித்தது, பெரியார் சிலைக்கு அவமதிப்பு என தமிழகம் தொடர்ந்து சூடாகவே காணப்படுகிறது. கந்த சஷ்டி விவகாரத்தில் கருப்பர் கூட்டம் மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒருவர் கைது செய்யபட்டார். இன்னொருவர் சரணடைந்தார்.

H Raja slams late CN Annadurai

இந்த நிலையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு என்ற பிரச்சினை வெடித்து அது விஸ்வரூபமானது. இதையடுத்து பெரியாராவது மயிராவது என்ற ஹேஷ்டேக்கை சிலர் டிவிட்டரில் டிரண்டாக்கியுள்ளனர். மறுபக்கம் அதற்குப் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

கந்த சஷ்டிக்கு துடிக்காதவர்கள் இப்ப துடிப்பது ஏன்? ஹெச் ராஜா கேள்வி!! கந்த சஷ்டிக்கு துடிக்காதவர்கள் இப்ப துடிப்பது ஏன்? ஹெச் ராஜா கேள்வி!!

இந்தப் பின்னணியில் எச். ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் திமுகவின் முதல் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை அவர் இந்து விரோதி என்று வர்ணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இந்து விரோத திக, திமுக: அண்ணா இந்து விரோதி என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்பதால் பல பொய்கள் பரப்பப் படுகின்றன. கீமாயணம் எழுதியது யார்? அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்று மதுரை மீனாட்சி அம்மனை இழிவாக பேசிய சி.என்.அண்ணாதுரை இந்து விரோதியே என்று எச். ராஜா கூறியுள்ளார்.

H Raja slams late CN Annadurai

Recommended Video

    Periyar சிலைக்கு காவிப்பூச்சு : கொந்தளித்த தலைவர்கள்

    அண்ணாவின் பெயர் தற்போது சந்திக்கு இழுக்கப்பட்டுள்ளதால் திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் கூட இதற்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடுத்து அண்ணா தொடர்பான சர்ச்சைகள் வெடிக்கும் என்று தெரிகிறது.

    English summary
    BJP national secrtary H Raja has slammed late CN Annadurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X