சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோவ பார்த்து என்ன எச் ராஜா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு? ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபராம்

Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் ஆக்கப்பூர்மான சிந்தனை அற்ற நபர் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா விளாசியுள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்தது. கஸ்தூரி ரங்கன் பரிந்துரையை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

சமூகவலைதளங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்தது. பிரபலங்கள் பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

சீமான் கேட்டது சரிதானே.. தேவையில்லாத இடைதேர்தல்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்! சீமான் கேட்டது சரிதானே.. தேவையில்லாத இடைதேர்தல்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்!

பின்வாங்கிய மத்திய அரசு

பின்வாங்கிய மத்திய அரசு

விவகாரம் வில்லங்கமாவதை உணர்ந்த மத்திய அரசு புதிய கல்விக்கொள்கைக்கான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திரும்பபெற்றது. இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியை கைவிட்டது.

வைகோவை விளாசிய எச் ராஜா

வைகோவை விளாசிய எச் ராஜா

இந்நிலையில் ஸ்டாலின் கட்டளையிட்டால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வைகோவை விளாசியிருக்கிறார்.

ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர்

ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர்

அதாவது வைகோ ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர் என எச் ராஜா கூறியுள்ளார். ஏற்கனவே வைகோ மத்திய அரசு குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

எச் ராஜா விமர்சனம்

எச் ராஜா விமர்சனம்

அப்போதே வைகோவை மிரட்டும் வகையில் எச்சரித்திருந்தார் எச் ராஜா. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் வைகோ ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர் என விமிர்சித்திருக்கிறார் எச் ராஜா.

பெற்றோரை கேட்க வேண்டும்

பெற்றோரை கேட்க வேண்டும்

மேலும் பள்ளிகளில் இந்தி மொழியை கற்பிக்க ஆதரவாகவும் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கருத்தில் சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்க வாய்ப்புள்ளது.பணம் படைத்த திக,திமுக,மதிமுக,கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் கருத்து கேட்கப்பட வேண்டும்

வியாபார ஸ்தாபனங்கள்

வியாபார ஸ்தாபனங்கள்

இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம் என்றும் இன்னும் சில தினங்களில் போராட்டத்திற்காக ஒன்றுகூட உள்ளோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதற்கும் எச்ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் எச் ராஜா பதில் கூறியுள்ளார்.

English summary
BJP National secretary H Raja has slammed MDMK General secretary Vaiko for opposing Hindi language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X