சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம்.. ஆனால் காவித் துண்டு போட்டா தப்பா.. ஹெச் ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    குல்லா போட்டுக்கலாம்.. ஆனால் காவித் துண்டு போட்டா தப்பா - ஹெச் ராஜா

    சென்னை: கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தேனி தொகுதி எம்பியான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். இந்த விழாவில் காவித்துண்டு அணிந்து பேசிய ரவீந்திரநாத், ", இதே சின்னமனூரில் கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கி வைத்தேன்.

    H Raja support raveendranath mp speech of first all are hindu

    தற்போது, எம்பியாக இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்துள்ளேன் கடந்த ஆண்டு நான் பேசுகையில் மோடியே மீண்டும் பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்து விட்டார். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது" என்று பேசினார்.

    ரவீந்திரநாத் குமார் எம்பியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் ரவீந்திரநாத் குமாரின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக இன்னொரு பதிவில், முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் மாற்றுமத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தீபாவளி,விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததை விவாதிக்கலாம். ஆனால் ஊடகங்கள் ரவீந்திரன் நாம் இந்துக்கள் என்றதை விவாதிக்கிறது. இதுவும் இந்து விரோதமே" என கூறியுள்ளார்.

    English summary
    H Raja support raveendranath mp speech of first all are hindu and also h raja attack dmk over hindu festival
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X