சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு.. நம்ம எச் ராஜா வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வந்துட்டாரு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: தமிழகத்தில் வாஷ் அவுட்டான பாஜக!- வீடியோ

    சென்னை: பாஜக ஆட்சிய அமைய வாக்களித்த மக்களுக்கும் சிவகங்கையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் அக்கட்சியின் தேசிய செயலாளரான எச் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்பார்த்ததை விடவும் அதிக இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அந்தக் கட்சி தனித்தே 300 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று விட்டது.

    இதனால் மத்தியில் மீண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையவுள்ளது. காங்கிரஸ் கட்சியை தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையை இதன்மூலம் பாஜக பெற்றுள்ளது.

    போதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக! போதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக!

    எதிர்க்கட்சி பிரச்சாரம்

    எதிர்க்கட்சி பிரச்சாரம்

    ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கொண்டு சென்றதே இதற்கு காரணம் என தமிழக பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    டஃப் கொடுக்காத ராஜா

    டஃப் கொடுக்காத ராஜா

    சிவகங்கை தொகுதியில் காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜா போட்டியிட்டார். நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது கார்த்தி சிதம்பரத்திற்கு டஃபே கொடுக்காமல் தோல்வியடைந்துவிட்டார் எச் ராஜா.

    அதிரடி மாற்றத்திற்கு தயார்.. ரஜினியை சந்திக்க காத்திருக்கும் அதிமுக தலைகள்.. விரைவில் ஆலோசனை! அதிரடி மாற்றத்திற்கு தயார்.. ரஜினியை சந்திக்க காத்திருக்கும் அதிமுக தலைகள்.. விரைவில் ஆலோசனை!

    3 லட்சம் வாக்குகள்

    3 லட்சம் வாக்குகள்

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஆனால் எச் ராஜா 2,33,860 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் எச் ராஜா படுதோல்வியடைந்தார்.

    நன்றி தெரிவித்த எச் ராஜா

    இந்நிலையில் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின் ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் எச் ராஜா.

    அதிமுகவின் கோட்டையை சல்லிசல்லியாக நொறுக்கிய கமல்.. கொங்கில் சிங்கமாக உருவெடுக்கும் மநீம!' அதிமுகவின் கோட்டையை சல்லிசல்லியாக நொறுக்கிய கமல்.. கொங்கில் சிங்கமாக உருவெடுக்கும் மநீம!'

    English summary
    BJP national secretary H Raja has said thanks to evryone who voted for BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X