சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா!

தயாநிதி மாறனின் பேச்சை விமர்சித்து எச் ராஜா ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள்?.. தயாநிதி மாறன் ஆவேசம்- வீடியோ

    சென்னை: "ஊழலின் ஊற்றுக்கண் ஊழலுக்கு எதிராக அனல் தெறிக்கும் பேச்சாம். இன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.." என்று தயாநிதிமாறனின் பாராளுமன்ற பேச்சு குறித்து எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

    திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்து வைத்து பேசி வருகிறார்கள். அதன்படி தயாநிதி மாறனும், குடிநீர் பிரச்சனையை அவையில் எழுப்பினார்.

    H Raja tweet about Dayanidhi Marans speech

    அப்போது, "தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்காக அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8 வருஷத்தில், சரியான திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. ஒரு மோசமான ஊழல் மிகுந்த அரசு தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது. 2014-ல் பணபலத்தால் அதிமுக வெற்றிப்பெற்றது. தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்தது'' என்றார்.

    இதற்குபாஜக எம்பிக்கள் குறுக்கிட்டு, "தயாநிதி மாறன் தேவையில்லாததை எல்லாம் பேசுகிறார். தேவையில்லாமல் மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார் 'ஊழல்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்த அனுமதிக்க முடியாது" என்று சொல்லி அமளியில் ஈடுபட்டனர். இது குறித்துதான் எச்.ராஜா கருத்து சொல்லி உள்ளார்.

    தனது ட்வீட்டில், "ஊழலின் ஊற்றுக்கண் ஊழலுக்கு எதிராக அனல் தெறிக்கும் பேச்சாம். சாத்தான் வேதம் ஓதுகிறது. இரண்டரை ஆண்டுகள் பொய்களை பரப்பி வெற்றி கண்ட கூட்டமல்லவா. ருசி கண்ட பூணை. 5 வருடங்களுக்கு இன்னமும் என்னென்ன கேலிக்கூத்துகள் அரங்கேறும்." என்று பதிவிட்டுள்ளார்.

    எச்.ராஜா "பூனை"க்கு பதிலாக "பூணை" என்று வழக்கம்போல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளதையும் தாண்டி ஏராளமான கமெண்ட்கள் இதற்கு குவிந்து வருகின்றன.

    English summary
    H Raja has criticized DMK MP Dayanidhi Marans speech about the scam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X