சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்!

எதிர்க்கட்சியாக கூட காங்கிரஸ் தேறாது என்று எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ம்ஹும்.. தேறாது.. தேறாது.. என்று எச்.ராஜா சொல்லிவிட்டார்.. இவர் இப்படி சொன்னது காங்கிரஸ் கட்சியைதான்!

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. அதேபோல ஹரியானாவில் கட்டார் தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் உள்ளது. இங்கு வாக்குபதிவு இன்று மாலை 6 மணிக்கு நடந்து முடிந்தது.

h raja tweet about exit polls

இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை செய்தி நிறுவனங்கள் வெளியிட ஆரம்பித்தன. என்ன ஆச்சரியம்.. இந்த இரு கூட்டணியும் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று அனைத்து எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளும் சொல்லி உள்ளன.

27ம் தேதி தீபாவளி.. அடுத்த நாள் அரசு விடுமுறை.. ஸ்வீட் ஷாக் கொடுத்த தமிழக அரசு!27ம் தேதி தீபாவளி.. அடுத்த நாள் அரசு விடுமுறை.. ஸ்வீட் ஷாக் கொடுத்த தமிழக அரசு!

அதாவது பாஜகவுக்கே ஒட்டுமொத்த ஆதரவும் கிடைத்திருக்கிறது.. ஒரு கருத்துக் கணிப்பில் மற்ற கட்சிக்கு வாய்ப்புள்ளதாக ஒரு பேச்சுக்குகூட சொல்லவில்லை. இந்த கருத்துக் கணிப்பை முழுசா நம்பறதா வேணாமான்னு ஒரு குத்துமதிப்பான முடிவுக்கு நாம் வராவிட்டாலும், பாஜக தரப்புக்கு இந்த எக்சிக் போல் முடிவுகள் மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.

அதிலும் எச்.ராஜா ரொம்ப குஷியாகவே இருக்கிறார். இன்று மாலை நடந்து முடிந்த அனைத்து கருத்துக் கணிப்புகளையும் நாமும் நமது இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட்டிருந்தோம். இதனைதான் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது ட்வீட் பக்கத்தில் எடுத்து போட்டுள்ளார். அத்துடன், "காங்கிரஸ் அங்கீகாரம் பெற்ற எதிர் கட்சியாகப் கூட தேறாது" என்ற வரிகளையும் பதிவிட்டுள்ளார்.

கருத்து கணிப்புகளில் ஒன்றில்கூட காங்கிரஸ் இல்லை என்பதாலேயே எச்.ராஜா இவ்வாறு சுட்டிக் காட்டி உள்ளார். இருந்தாலும் பல ட்விட்டர்வாசிகள் எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு கருத்து சொல்லி உள்ளனர். அதிலும் ஒருவர், "தமிழகத்தில் ஏன் பிஜேபி ஆல் மாற்றம் கொண்டு வர இயலவில்லை" என்று உரிமையாகவே எச்.ராஜாவை கேள்வி கேட்கவும் செய்திருக்கிறார்.

English summary
BJP national secretary h raja said that the Congress would not even qualify as an opposition party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X