சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்னுமில்லாமல் போன "வெங்காய அரசியல்".. கர்நாடகாவை காட்டி எதிர்க்கட்சிகளை தாக்கும் எச். ராஜா

பாஜக வெற்றி குறித்து எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக !

    சென்னை: "எதிர் கட்சிகளின் வெங்காய அரசியல் எடுபடவில்லை... கர்நாடகாவில் வாக்காளர்கள் முன்னேற்றத்திற்கு வாக்களித்துள்ளனர்" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கர்நாடக வெற்றி குறித்து ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபாரமான வெற்றியை பெற்றுள்ளது.

    15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பாஜக இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது.

    வாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பாவாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா

     தொண்டர்கள்

    தொண்டர்கள்

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். அக்கட்சி தலைவர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.. வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

     எச்.ராஜா

    எச்.ராஜா

    அந்த வகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் குஷியுடன் ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார்... ஆனால் வெங்காயத்தை வைத்து இந்த பதிவினை ராஜா போட்டுள்ளார்.. இதற்கு காரணம், நாடு முழுவதும் வெங்காய விலை மிக உச்சத்துக்கு ஏறி வந்த நிலையில், பார்லிமென்ட்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

    குற்றச்சாட்டுகள்

    குற்றச்சாட்டுகள்

    எதிர்க்கட்சிகள், வெங்காய விலை உயர்வை முன்வைத்து அவையில் போராட்டமும் செய்தனர்.. காரசார விவாதங்களும் எழுந்தன.. பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளும் அள்ளி வீசப்பட்டன.. இதன் பாதிப்பு கர்நாடக இடைத்தேர்தலும் பிரதிபலிக்குமா, எடியூரப்பாவுக்கு இது ஒரு சறுக்கலை தருமா என்ற சந்தேகமும் லைட்டாக எழுந்தது. எனினும், பாஜக அங்கு அபார வெற்றி பெற்றுள்ளதால்தான், இந்த வெங்காய பிரச்சனையை வைத்தே எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்.

    வெங்காய அரசியல்

    அதில், "எதிர் கட்சிகளின் வெங்காய அரசியல் எடுபடவில்லை. கர்நாடகாவில் வாக்காளர்கள் முன்னேற்றத்திற்கு வாக்களித்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு வழக்கம்போல் ஆதரவும், எதிர்ப்பும் எச்.ராஜாவுக்கு ட்விட்டர்வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

     உரத்த குரல்

    உரத்த குரல்

    எல்லாம் சரிதான்.. ஆனால் வெங்காய விலை குறையவே இல்லையே.. மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனரே. கட்சிகள் அரசியல் செய்யலாம்.. ஆனால் மக்கள் செய்யவில்லையே.. அவர்கள் தினசரி விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனரே.. இதற்கு மத்திய அரசு ஏதாவது செய்யலாமே.. அதற்கு எச். ராஜா போன்றோர் உரத்த குரல் எழுப்பி மக்கள் பக்கம் நிற்கலாமே.. இதை செய்வதில் எந்தத் தடையும் இல்லையே.. இதை யோசித்து பார்க்கலாமே!

    English summary
    bjp win in the karnataka bypoll results and H Raja wishes and tweet about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X