சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி!

கி.வீரமணிக்கு எச் ராஜா ட்வீட் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    H Raja : பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி..வீடியோ

    சென்னை: மத்திய அரசே இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் சும்மா இருந்தாலும் எச்.ராஜா விட மாட்டார் போலிருக்கிறது. ஒன்று, ப.சிதம்பரத்தை சீண்டுகிறார், இல்லையென்றால் பெரியாரிஸ்ட்டுகளை வம்பிழுக்கிறார். இப்போதும் கி.வீரமணிக்கு ஒரு கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார்!

    எச்.ராஜா பதிவிட்டுள்ள ட்வீட் இதுதான்: "பெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா? திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி? தார் சட்டியோடு எப்போது கிளம்பப் போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    H Raja tweet about Name Board in Hindi Language

    எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு வீரமணி தரப்பினர் யாருமே பதில் சொல்லவில்லை. மாறாக நெட்டிசன்களே அவருக்கு பதில் அளித்து பாடம் நடத்தி வருகிறார்கள்.

    "சார்..இது ஒரு கல்லூரி. இது இருப்பது புது டெல்லியில். நீங்க நினைப்பது மாதிரி வீரமணி மெயின்டெய்ன் பண்ணும் அலுவலகம் இல்லை. யாரும் நோட் பண்ணுவதற்குள் டுவீட்டை டெலீட் செய்யவும். அடுத்த முறை வீட்டில் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கூட்டி கொண்டு வரவும்" என்று ஒரு ட்வீட் உள்ளது.

    "சார்.இது டெல்லியில் இருக்கும் மய்யம்.அங்கிருக்கும் இந்திகாரனுகளுக்கு இங்கிலீஷ் தெரியாதில்லையா?அவங்களுக்கு பான்பராக் மட்டுமே தெரியும். அதனால அவங்க ஊர்ல அவங்க மொழில எழுதி போட்டிருக்காங்க" என்று இன்னொரு ட்வீட் பதிவாகிறது.

    நெட்டிசன்கள் விளக்கம் அளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வளவு காலமாக இல்லாமல் இந்த விவகாரத்தை படம் போட்டு ஏன் இப்போ வந்து இதனை சொல்கிறார் என்பதுதான் நமக்கு குழப்பமாக உள்ளது.

    ஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம் ஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்

    English summary
    BJP National secretary H Raja tweet about the Hindi Language Name Board in DK Delhi Office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X