சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதுக்கு எதுக்கு இவங்க கவலைப்படறாங்க.. இதுதான் என் பதில்.. எச். ராஜா பொளேர்

தமிழக பாஜக தலைமை பதவி குறித்து எச். ராஜா கருத்து பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "யார் அடுத்த தலைவர்ன்னு கட்சியில் இருப்பவங்களை விட இவங்க ஏன் கவலைப்படறாங்க" வியப்புடன் வினா ஒன்றினை எச்.ராஜா எழுப்பி உள்ளார். மேலும் "தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில்..." என்று ட்வீட் ஒன்றையும் பதிவிட்டு தெளிவுபடுத்தி உள்ளார்.

மாநில தலைமை பதவி காலியானதை அடுத்து புதிய மாநில தலைவர் நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 2 தினங்களாகவே கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

H Raja tweet about Next TN BJP Leader

வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதா, சிபி ராதா, கருப்பு முருகானந்தம், ஏபி முருகானந்தம், நயினார் நாகேந்திரன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர்கள் ரேஸில் வந்து போகின்றன.

எச்.ராஜா பெயர் போன முறையும் தலைவர் பதவியின் போது, இப்படிதான் அடிபட்டது. இந்த முறையும் அடிபடுகிறது. அதேசமயம், தனக்கு தலைவர் பதவி தேவையில்லை என்றும் எச்.ராஜா சொல்லவும் இல்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, அடுத்த தலைவர் யார் என்பது குறித்து சொன்ன விளக்கத்தை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். "தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில்..." என்று அதற்கு ஒரு கேப்ஷனும் தந்துள்ளார். பேட்டியில் அவர் சொன்னதாவது:

"யார் அடுத்த தலைவர் என்பதை அகில இந்திய தலைவர் முடிவு செய்வார். அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். எனக்கு என்ன ஆச்சரியம்னா, பாஜகவுக்கு அடுத்து யார் தலைவரா வருவார்னோ, வரணும்னோ கட்சியில் இருப்பவர்கள் கவலைப்படுவதைவிட, வெளியில இருக்கிறவங்க ஏன் கவலைப்படறாங்கன்னு எனக்கு தெரியல.

ஒன்னு மட்டும் தெளிவு.. பிரதமர், அமித்ஷாஜி, உட்பட தலைவர்கள் எல்லாம் சேர்ந்து முடிவு எடுப்பாங்க. அவங்க யாரை கை காட்டறாங்களோ அவங்களை தமிழக பாஜகவும், தமிழக மக்களும் ஏத்துக்க போறாங்க. இதைப்பத்தி நாம ஏன் கவலைப்படணும்" என்றார்.

"நாம" என்றால், லிஸ்ட்டில் எச்.ராஜா இல்லையோ?!

English summary
BJP National Secretary H Raja tweet about Next TN BJP Leader and says All-India leadership will decide who will be the leader
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X