சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்

ப.சிதம்பரம் விவகாரம் குறித்து எச். ராஜா ட்வீட் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka Gandhi tweets on P chidambaram | ப.சிதம்பரம் கைது நடவடிக்கை :பிரியங்கா காந்தி ஆவேசம்-வீடியோ

    சென்னை: ப.சிதம்பரம் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எல்லோரும் செம குஷியாக இருக்கிறார்கள் போலும். டிவீட்டாக போட்டுத் தள்ளிக் கொண்டுள்ளனர். இப்போது எச். ராஜாவும் இதில் சேர்ந்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் சிபிஐ, இன்னொரு பக்கம் அமலாக்கப் பிரிவு ஆகியவை காத்துக் கிடக்கின்றன. கோர்ட்டுகளில் இதுவரை அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால் ப.சிதம்பரம் வெளியுலகில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கிறார்.

    H Raja tweet about P Chidambarams Case issue

    இதை வைத்து டிவிட்டரில் விளையாடிக் கொண்டுள்ளனர் பாஜகவினர். அன்று அமித் ஷாவை ஆட்டிப் படைத்தார் ப.சிதம்பரம். அதற்குரிய எதிர் வினையை இப்போது அனுபவிக்கிறார் என்று பல்வேறு பாஜகவினர் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

    தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சும்மா இருப்பாரா. அவரும் டிவீட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து டிவீட்டாக போட்டு வருகிறார்.

    ப.சிதம்பரமும் அவரது குடும்பமும் ஊழலின் ஊற்றுக் கண்கள் ஆகும். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் உங்களது குடும்பமும் சேர்ந்து உள்ளே போகும் என்று பிரியங்கா காந்தி டிவீட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் எச். ராஜா.

    அதேபோல ப.சிதம்பரம் தலைமறைவுன்னு போட்ட ஒருவரது டிவீட்டில், தலைமறைவா? சுவர் ஏறிக் குதித்து ஃபியட் கார்ல ஓடியிருப்பார் என்று நக்கலடித்துள்ளார் எச். ராஜா.

    மறுபக்கம் சுப்பிரமணியம் சாமியும் ப.சிதம்பரம் குறித்து டிவீட்டுகளாகப் போட்டு வருகிறார். அதேபோல சுப்பிரமணியம் சாமியிடம் மோதினால் இதுதான் கதி என்று அவரது ஆதரவாளர்கள் இடை இடையே ஓடிக் கொண்டுள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட் தரப் போகும் தீர்ப்பு வரும் வரை இப்படித்தான் இருக்கும் போல டிவிட்டர்.

    English summary
    P Chidambaram INX case issue: BJP National Secretary H Raja tweet about P Chidambarams case issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X