சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படி டெய்லி கோர்ட்டுக்கு போய் பெயிலுக்கு நிக்கறீங்களே.. ப.சிதம்பரம் மீது எச். ராஜா தாக்கு!

பட்ஜெட் குறித்த ப சிதம்பரம் கருத்துக்கு எச் ராஜா பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இப்படி டெய்லி போய் கோர்ட்டுல பெயிலுக்கு நிக்கறீங்களே" என்று ப.சிதம்பரத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நறுக்கென கேட்டுள்ளார்.

வழக்கமாக, ப சிதம்பரம் என்றாலே கொஞ்சம் காட்டமாகி விடுவார் எச்.ராஜா. அவர் தரப்பில் எந்த கருத்தோ, பேட்டியோ இல்லையென்றால்கூட, ஊழல், வழக்குகள் குறித்து வம்பிழுத்து ட்வீட் போடுவார். அந்த மாதிரிதான் இப்போதும் நடந்துள்ளது.

H Raja tweet about P Chidambarams statement

நேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு பல தலைவர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரமும் தனது கருத்தை சொல்லி இருந்தார். அதில், "பட்ஜெட் தயாரிப்பில், ஏழை மக்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்தும் கேட்கப்படவில்லை.

நடைபெறவிருக்கும் வேலூர் தேர்தலில்.. அதிமுக கூட்டணி சார்பில்.. வேற யாரு.. ஏசிஎஸ்தான்! நடைபெறவிருக்கும் வேலூர் தேர்தலில்.. அதிமுக கூட்டணி சார்பில்.. வேற யாரு.. ஏசிஎஸ்தான்!

குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டியதில்லை. மத்திய அரசின் வருமானம், செலவு எவ்வளவு என சொல்லாமல் விட்டு விட்டது முறையல்ல, வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டு இருக்கும் போது, ஆதார் எண் எதற்கு? பட்ஜெட்டில் முக்கிய விவரங்களை மக்களிடம் சொல்லாமல் ஏன் மறைக்கிறீர்கள்? இது ஒரு தெளிவற்ற பட்ஜெட்" என்று லிஸ்ட் போட்டு கேள்விகளாய் கேட்டு விமர்சித்திருந்தார்.

ஆனால் ப.சிதம்பரம் கேட்ட இந்த கேள்விகளில் ஒன்றுக்குகூட எச்.ராஜா பதில் சொல்லவே இல்லை. இதுக்கு சம்பந்தமே இல்லாமல், ஒரு ட்வீட் போட்டு பதில் சொல்லி உள்ளார்.

அதில், "தினந்தோறும் நீதிமன்றத்தில் பெயிலுக்காக நிற்பதுதான் சரியாக வழிநடத்தும் லட்சணமோ" என்று பதிவிட்டுள்ளார். அதேசமயம், எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு ப.சிதம்பரம், அவரது மகன் இருவராலும் பதில் சொல்லவே முடியாதுதான் என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

English summary
BJP National Secretary H Raja has criticized Congress Senior Leader P Chidambaram and his case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X