சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மும்பைல ஏன் வருண ஜெபம் செய்தீங்க.. இப்ப பாருங்க வெள்ளக்காடாய்ருச்சு.. எச். ராஜாவை வாரும் நெட்டிசன்ஸ்

ஊடகங்கள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக எச்.ராஜா கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "வருண ஜெபம் செய்ததால்தான் தமிழ்நாடு முழுக்க மழை பெய்தது. ஆனால் ஊடகங்கள் திமுகவின் பிரச்சார யுக்தியை பரப்பி, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துகின்றன" என்று எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுகவினர் யாகம் நடத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர்கள் என பிரதான கோயில்களில் சிறப்பு யாகம், பூஜை நடத்தினர்.

மற்றொரு பக்கம் குடிநீர் பிரச்சனையில் தமிழக அரசின் அலட்சியத்தை கண்டித்து திமுக மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஒரு பக்கம் யாகம், ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் என ஒரே நாளில் தமிழகம் பரபரப்பானது.

மழை பெய்தது

இந்நிலையில், வானிலை மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் ஏற்கனவே சொல்லியிருந்தபடி சென்னை உள்ளிட்ட இடங்களில் மழையும் பெய்தது. இப்படி மழை பெய்தது வருண ஜெபத்தினால்தான் என்றும், ஆனால் ஊடகங்கள் திமுகவின் பிரச்சார யுக்தியை பரப்புவதாகவும் எச்.ராஜா கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

கண்டனம்

கண்டனம்

அதில், "வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்துள்ள போது திமுகவின் பிரசார யுக்தியை பரப்புவதை கடமையாக கொண்டுள்ள ஊடகங்கள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளம்

வெள்ளம்

எச்.ராஜாவின் இந்த பதிவிற்கு ஏகப்பட்ட கமெண்ட்களை நெட்டிசன்கள் போட்டு வருகிறார்கள். "மும்பைல எதுக்கு ஜெபம் செஞ்சீங்க, ஒரே வெள்ளமா கெடக்கு" என்று ஒரு ட்வீட் வந்து விழுகிறது. அதேபோல,

வருண ஜெபம்

"திரு.எச்.ராஜா அவர்களே, உங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள். வருடத்தின் 365 நாட்களும் கோவில்களில் வருண ஜெபம் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் 365 நாட்களும் மழை பெய்யும். நாமும் இனி கர்நாடகாவிடம் கை ஏந்த வேண்டியதில்லை. இதை செய்ய வலியுறுத்துவீர்களா?" என்று உரிமையாக இன்னொரு ட்வீட் தெறிக்கிறது.

English summary
BJP National Secretary H Raja slams Media for supporting DMK Parties in Water scarcity issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X