சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாகம் நடத்தி மழை வந்திருச்சே.. எச்.ராஜா குஷி.. அங்க மழை இல்லை என்னன்னு பாருங்க.. நெட்டிசன்கள் கலாய்

யாகம் நடத்தியதால் மழை வந்தது என்று எச்.ராஜா குஷியான ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அட.. ஆமாம்.. எச்.ராஜா சொன்னது போலவே மழை வந்தாச்சு! "யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள். ஆனால் இப்போது மழை பெய்து வருகிறது.. தமிழகம் மீண்டும் ஆன்மிக பூமி ஆகட்டும்" என்று எச்.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை சரியாக பெய்யவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர்களுக்கு சமீபத்தில் ஒரு உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

இதற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் "இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல" என்று பகிரங்க கண்டனம் தெரிவித்திருந்தனர்.

யாகம் நடத்த உத்தரவு

இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில்,"இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது சட்டப்படி செல்லும். அனைத்து கோவில்களிலும் இது நிறைவேற்றப்பட வேண்டும்.

கண்டன அறிக்கை

கண்டன அறிக்கை

இதை கண்டித்து இந்து விரோத வீரமணி அறிக்கை விட்டதற்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை எல்லாவிதத்திலும் தெரிவிக்கவும்" எனப் பதிவிட்டார். இதையடுத்து, தமிழக கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

இந்நிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. ஏற்கனவே பதிலடி தந்த எச்,ராஜா திரும்பவும் வந்து ட்வீட் போட்டு, திராவிடர் கழகத்தை சீண்டி விட்டுள்ளார்.

தற்குறிகள்

அதில், "கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள். தமிழகம் முழுவதும் பூஜைகள் தொடங்கியுள்ளன. சேலம், வேலூர், திருச்சி, திருப்பூர், அவிநாசி, மதுரை, சென்னையில் பட்டாபிராம் என்று மழை பெய்து வருகிறது. தமிழகம் மீண்டும் ஆன்மிக பூமி ஆகட்டும். வளம் பெறுவோம்." என்று பதிவிட்டுள்ளார்.

சரியா பண்ணல

இதற்கு நெட்டிசன்கள் வரவேற்பும், எதிர்ப்புமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, "புயல் அறிவிப்பிற்கு பின் நடத்தியதற்கு வாழ்த்துக்கள்..", "மிக சிறப்பு. மற்ற இடத்தில் யாகம் சரியா பண்ணல. என்னான்ன கேளுங்க boss" என்றெல்லாம் கமெண்ட்கள் வந்து விழுந்து வருகின்றன.

English summary
BJP H raja says in his tweet that, Rain lashes in Tamilnadu due to Temple special Yagnas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X