சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்".. எச். ராஜா பொளேர்

பிரதமர் மோடியை வைகோ சந்தித்தது குறித்து எச். ராஜா ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko modi meet | மோடி, அத்வானி, சு.சுவாமியுடன் வைகோ சந்திப்பு காங்.-ல் புகைச்சல்!- வீடியோ

    சென்னை: "கோ பேக் மோடின்னு சொல்லி கருப்பு பலூன் விட்டவர்கள், பிரதமரை சந்திக்கும்போது இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் மோடி.. இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்" என்று வைகோவை எச்.ராஜா நேரடியாகவே தாக்கி ட்வீட் போட்டுள்ளார்.

    நேரம் கிடைக்கும்போதெல்லாம் 2 பேரை எச். ராஜா வறுத்தெடுக்கிறார் என்றால் ஒருவர் ப.சிதம்பரம், மற்றொருவர் வைகோவாக இருக்கும், அல்லது கி.வீரமணியாக இருக்கும்.

    "வைகோ நாவை அடக்க வேண்டும், வைகோ ஒரு பிரிவினைவாதி.. அவரை சாகும்வரை சிறையில் தள்ள வேண்டும்" என்ற வாசகங்கள் எல்லாம் எச்.ராஜா கடந்த காலங்களில் வைகோவை பார்த்து உதிர்த்தவை.

    வெட்கம்

    வெட்கம்

    சில தினங்களுக்கு முன்பு வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் தந்தபோதுகூட "வைகோ அவர்கள் தேசவிரோதி என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ அல்ல. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர் மாநிலங்களவை உறுப்பினரா? வெட்கம்" என்று பதிவிட்டுள்ளார். இப்படி "வெட்கம்" என்று குறிப்பிட்ட வைகோவைதான், பிரதமர் மோடியே நேற்று சந்தித்து பேசி உள்ளார்.

    கொள்கை

    கொள்கை

    23 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பியாகி இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "பிரதமர் மோடியையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வருபவன் நான். அப்படியிருந்தும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். மோடி என்னிடம், நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள் என கூறினார். அதற்கு நான் கொள்கையின் அடிப்படையிலேயே இவ்வாறு செயல்படுகிறேன் என்றேன்" என்றார்.

    மோடி

    மோடியை சந்தித்து பேசிவிட்டு, அது சம்பந்தமான ஒரு பேட்டியையும் வைகோ தந்துவிட்ட பிறகு, எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "தமிழகத்திற்கு பிரதமர் வந்த போது "Go back Modi" என்று கருப்பு பலூன் விட்டனர். அதே நபர்கள் பிரதமரை சந்திக்கும் போது இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் பிரதமர். இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்" என்று பதிவிட்டுள்ளார்.

    விவாதம்

    விவாதம்

    அரசியலில் 40 வருஷத்துக்கும் மேலாக இருக்கும் ஒரு மூத்த தலைவர் வைகோ.. அன்று எம்பியாக இருந்தபோது கர்ஜிக்கும் குரலால் அவையையே திரும்பி பார்க்க வைத்தவர். வைகோ அவையில் விவாதித்தால், அதை கட்சி பேதமின்றி உட்கார்ந்து கேட்பார்களாம் உறுப்பினர்கள்.

    நாகரீகம்

    நாகரீகம்

    இப்படி நாடு முழுதும் அறிந்த ஒரு அரசியல்வாதி, மீண்டும் அவைக்கு டெல்லிக்கு செல்லும்போது, பிரதமரை சந்தித்து பேசுவது என்பது இயல்பு.. இது ஒரு அரசியல் நாகரீகம்.. சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்த நிர்மலா சீதாராமனை டெல்லியில் வைகோ சந்தித்து பேசினார். ஆனால் பிரதமரை சந்திப்பது என்பது ஒரு அரசியல் மாண்பு என்பதை கூட மறந்து எச்.ராஜா டுவீட் போட்டு குத்தி காட்டி பேசியிருப்பது ஆச்சரியமாக உள்ளது!

    English summary
    BJP National Secretary H Raja Tweet about Vaiko and PM Modis meeting in Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X