சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நண்பர் துரைமுருகனுக்கு இது டூ மச்சா தெரியலை? கேட்கிறார் எச் ராஜா!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் : அடித்து சொல்லும் துரைமுருகன்!- வீடியோ

    சென்னை: ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்ற துரைமுருகனின் கருத்து குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டிவிட்டியுள்ளார்

    ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் நாட்டின் ஜனாதிபதி ஆவார் அதற்கான தகுதியும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது என துரைமுருகன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் பேசு பொருளாகியுள்ளது.

    H Raja tweeted about Duraimurugan Statement on stalin

    சமூக வலைதளங்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் துரைமுருகன் பேச்சு குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினை குடியரசுத் தலைவராக்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறி கலாய்த்தார்.

    மத்தியப் பிரதேசத்துக்கு என்னாச்சு.. மடமடன்னு ஏறிப் போன வாக்கு சதவீதம்.. மோடிக்கு லக்கி? மத்தியப் பிரதேசத்துக்கு என்னாச்சு.. மடமடன்னு ஏறிப் போன வாக்கு சதவீதம்.. மோடிக்கு லக்கி?

    இந்நிலையில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா துரைமுருகன் கருத்து குறித்து டிவிட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை? என கேட்டுள்ளார் எச் ராஜா.

    English summary
    H Raja has tweeted about Duraimurugan Statement on stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X