• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கெஜ்ரிவால் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவா? வெட்கக்கேடு.. எச்.ராஜா ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது வெட்கக்கேடு என்று எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது "தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள். அதனால் அவர்கள் எளிதாக கட் ஆப் பெற்று டெல்லி பல்கலைக்கழகம் வருகிறார்கள்.

H Raja tweeted critizing Prakash Raj Comment

ஆனால் டெல்லியில் மாநில பாடத்திட்டம் இல்லை. இதனால் சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, டெல்லி பல்கலையில் சேர முடிவதும் இல்லை. டெல்லியில் இருக்கும் கல்லூரிகள் மத்திய அரசால் இயக்கப்படுகிறது" என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ், அவரது கருத்தை ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவருக்காக தேர்தல் பிரசாரமும் செய்தார். கெஜ்ரிவால் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு அளித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை வீரமணி கண்டித்தாரா?தமிழிசை கேள்வி டிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை வீரமணி கண்டித்தாரா?தமிழிசை கேள்வி

இது சம்பந்தமான ட்வீட்டில், "டில்லி ஒரு mini இந்தியா. பாரத தேசத்தவர் அனைவருக்கும் அது சொந்தம். தமிழ் மாணவர்கள் டில்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக ரசிகர்களின் ஆதரவால் வளர்ந்த பிரகாஷ்ராஜ் கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவளித்துள்ளது வெட்கக்கேடு" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

English summary
BJP National Secretary H Raja tweeted critizing Actor Prakash Raj Comment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X