சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்

திராவிடம் குறித்து எச்.ராஜா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "திராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க, மறைக்க, அழிக்க உபயோகப்படுத்தும் சொல்" என்று எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற கருத்தினை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு முதல் நபராக வந்து பதிவு போட்டு கண்டித்தது திமுக தலைவர் ஸ்டாலின்தான். இந்த கருத்தினை அமித்ஷா மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி, இது இந்தியாவா 'இந்தி'யாவா என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.

H Raja tweets about Diravidam

இந்நிலையில், தமிழக பாஜக கட்சி ஒரு பழைய போஸ்டர் ஒன்றை தூசி தட்டு கொண்டு வந்துள்ளது. ஸ்டாலினின் போட்டோ உள்ள அந்த போஸ்டரில் ஹிந்தி மொழியில் சில வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. முன்பு சென்னையில் ஒட்டப்பட்ட தேர்தல் பிரச்சார போஸ்டராக இது இருக்கக் கூடும் என தெரிகிறது.

ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக!ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக!

அதில், "ஓட்டு தேவைக்கு மட்டும் ஹிந்தி தொடர்பு மொழியாக இருக்கலாமா? அரசுபள்ளி மாணவர்கள் மட்டும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்கோ, வியாபாரம் பெருக்கவோ ஹிந்தி தொடர்பு மொழியாக பயன்படுத்த தடைவிதிப்பது இரட்டை நிலை அராஜகம். முதலில் ஓட்டு அரசியலில் ஹிந்தி திணிப்பை தடை செய்ய முடியுமா" என்று பதிவிட்டிருந்தது.

இது குறித்த செய்தியை நாமும் இன்று வெளியிட்டிருந்தோம். இதனை தனது ட்விட்டரில் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இணைத்து, "திராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க, மறைக்க, அழிக்க உபயோகப்படுத்தும் சொல் என்பதை உணர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு "திராவிடம் என்ற சொல் தேசிய கீதத்தில் எங்கிருக்கிறது தெரியுமா" என்றும், அப்பறம் ஏன் அதிமுகவுடன் கூட்டணி வெச்சீங்க என்றும் சிலர் இந்த ட்வீட்டுக்கு கீழே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
BJP National Secretary H Raja tweets about DMK and explains about the Word Diravidam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X